அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தெற்கு ஆஸ்திரேலிய ஆளுநர் பிரான்சிஸ் ஆடம்சன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து பேசினார்

प्रविष्टि तिथि: 25 JUN 2025 6:15PM by PIB Chennai

இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வரும் தெற்கு ஆஸ்திரேலிய ஆளுநர் பிரான்சிஸ் ஆடம்சன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், விண்வெளி, அணுசக்தி  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்து, இருநாடுகளுக்கிடையே விண்வெளி தொழில்நுட்பத்தில் மேலும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தார்.

அத்துடன் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்தியரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சென்ற வரலாற்று சிறப்புமிக்க   ஆக்சியம்-4 விண்வெளிப் பயணத்தை சிறப்பு திரையிடல் மூலம் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் இணைந்து பார்வையிட்டார். இது இந்தியாவுக்கு பெருமைமிக்க தருணம் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி திட்டம் உட்பட இந்தியாவின் விண்வெளி திட்டங்களுக்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்காக இந்தியா பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2139643

***

AD/TS/IR/AG/DL


(रिलीज़ आईडी: 2139669) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी