அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்நாட்டு மின்கல மறுசுழற்சி தொழில்நுட்ப வணிகமயத்திற்கு பேட்எக்ஸ் எனர்ஜிஸ் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நிதி ஆதரவு அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
24 JUN 2025 3:36PM by PIB Chennai
உள்நாட்டு மின்கல மறுசுழற்சி தொழில்நுட்ப வணிகமயத்திற்கு குருகிராமைச் சேர்ந்த பேட்எக்ஸ் எனர்ஜிஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நிதி ஆதரவு அளித்துள்ளது. காலாவதியான லித்தியம்-அயன் மின்கலங்களிலிருந்து லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனிஸ் ஆகியவற்றை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்து வணிகமயமாக்குவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
இந்தத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக், இந்த மாற்றமானது மின்சார வாகன போக்குவரத்தையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் நோக்கியதாக இருப்பதோடு மறுசுழற்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் சமஅளவு முக்கியத்துவம் அளித்துள்ளது என்றார். பேட்எக்ஸ் எனர்ஜிஸ் போன்ற உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிப்பது நமது பசுமை எரிசக்தி வழங்கல் தொடரை வலுப்படுத்துகிறது, முக்கியமான கனிம சுதந்திரத்தை விரிவுபடுத்துகிறது, நீடிக்கத்தக்க தொழில்துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்பில் இந்தியாவை தலைமை நிலையில் வைக்கிறது என்றும் அவர் கூறினார்.
பேட்எக்ஸ் எனர்ஜிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு உத்கர்ஷ் சிங் இந்த திட்டம் பற்றி கருத்து தெரிவிக்கையில், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் நிதி ஆதரவு எங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார். பசுமை தொழில்நுட்பத்திற்கான எங்களின் உறுதிபாட்டிற்கு மதிப்பளிப்பதாகவும், மின்கல மறுசுழற்சிக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதை அதிகரிக்கச் செய்வதாகவும் இந்த ஆதரவு உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த முன் முயற்சி நமது முக்கியமான கனிம இறக்குமதியை குறைப்பது மட்டுமின்றி உலகளாவிய பசுமை தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் புதிய சாதனையை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139197
***
TS/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2139312)
आगंतुक पटल : 19