குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாடுகள் தங்கள் சொந்த நலன்களுக்காக மட்டுமே செயல்படுகின்றன, இலட்சியவாதம், ஒழுக்கம் அல்லது சர்வதேச ஒற்றுமையின் அடிப்படையில் அல்ல: குடியரசு துணைத் தலைவர், சாவர்க்கரை நினைவு கூர்ந்தார்
Posted On:
23 JUN 2025 8:38PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இன்று வி.டி. சாவர்க்கரை நினைவு கூர்ந்தார், “ ‘புதிய உலகம்: இந்தியாவில் 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய ஒழுங்கு’ பக்கங்களைப் பார்க்கும்போது. ஆசிரியரின் சிந்தனையில் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் முத்திரையை உணர்ந்தேன்…….. ஒரு தீவிர யதார்த்தவாதியான சாவர்க்கர், போருக்குப் பிந்தைய உலகில் நம்பிக்கை கொண்டிருந்தார், அங்கு நாடுகள் இலட்சியவாதம், ஒழுக்கம் அல்லது சர்வதேச ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் தங்கள் சொந்த நலன்களைப் பின்தொடர்வதற்காக மட்டுமே செயல்படும். அவர் எவ்வளவு தீர்க்கதரிசனமாக இருக்கிறார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். கடந்த பதினைந்து நாட்கள், கடந்த மூன்று மாதங்களில் இதையெல்லாம் நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்”, என்று கூறினார்.
திரு ராம் மாதவ் எழுதிய 'புதிய உலகம்: இந்தியாவில் 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய ஒழுங்கு' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திரு தன்கர், " இன்று, பாரதத்தை வலுப்படுத்துவது இந்த அரசின் ஆளும் தத்துவம் மற்றும் உறுதிப்பாடு. அது உறுதியானது, பேரம் பேச முடியாதது, விமர்சகர்கள் இருந்தபோதிலும், அது வலிமையானது. நாடு ஒருபோதும் தனது நிலைப்பாட்டை இவ்வளவு உறுதியாக வெளிப்படுத்தியதில்லை. யார் என்ன சொன்னார்கள் என்ற கவனச்சிதறலால் நாம் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. அரசும், இந்தியாவும் அதன் மக்களும், முதலில் தேசத்திற்காகவும், நமது தேசியவாதத்திற்காகவும் உறுதியாக நிற்கிறார்கள்", என்று கூறினார்.
பாரதத்தின் அமைதியை விரும்பும் தன்மையை வலியுறுத்தி, “இந்த நாடு எப்போதும் உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வருகிறது, அதன் வரலாற்றில் எந்த நேரத்திலும் விரிவாக்கத்தில் ஈடுபட்டதில்லை. இன்றைய சமகால உலகளாவிய சூழ்நிலை, குறிப்பாக பாரதம் போன்ற அமைதியை விரும்பும் நாடுகளுக்கு, கவலையளிக்கும் வகையில் உள்ளது. பாரதம், அனைத்து குடிமக்களுக்கும் உலகளாவிய நல்வாழ்வு என்ற நிலையை அடைவதால், நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மாறுகிறோம். உலகளாவிய தென் நாடுகள் நமது பாதையைப் பின்பற்றக்கூடிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு போன்ற துறைகளை நாம் ஏற்கனவே வழிநடத்துகிறோம். பாரதத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடும்போது, நமது கண்ணோட்டம் மிகவும் பரந்ததாக இருக்க வேண்டும், தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்களால் கட்டளையிடப்படக்கூடாது”, என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139044
----
AD/RB/DL
(Release ID: 2139078)