பாதுகாப்பு அமைச்சகம்
சர்வதேச யோகா தினம் – 2025
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2025 8:28PM by PIB Chennai
பிரதமர் தலைமையில் நடைபெற்ற பிரதான யோகா நிகழ்வு விசாகப்பட்டினத்தின் ஆர்.கே. கடற்கரையில் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது, இதில் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையகத்தின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட சுமார் 10000 கடற்படை வீரர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். நங்கூரமிடப்பட்ட கடற்படைக் கப்பல்கள் கடல் பின்னணிக்கு வசீகரத்தை அளித்தன, மேலும் யோகா அமர்வுக்காக மிகப்பெரிய நிகழ்வுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு கடற்படை சமூகம் பெரிதும் பங்களித்தது.
இந்த ஆண்டு ஒரு தசாப்த யோகா கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறித்தது, மேலும் கடற்படை குடும்பம் 11வது யோகா தினத்தை அனைத்து கடற்படை நிலையங்களிலும் உற்சாகத்துடன் கொண்டாடியது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு துறைமுகங்கள் உட்பட அனைத்து கடற்படை தளங்கள் மற்றும் கடல் மற்றும் துறைமுகத்தில் உள்ள கப்பல்களில் ஒரு பொதுவான யோகா நெறிமுறை அமர்வு நடத்தப்பட்டது. சுமார் 50,000 கடற்படை வீரர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யோகா நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நட்பு வெளிநாட்டு கடற்படைகளின் பயிற்சியாளர்களும் இந்த நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்திய கடற்படை கப்பல்கள் யோகாவின் செய்தியையும் உணர்வையும் பெருங்கடல்கள் முழுவதும் பரப்பின. விரைவில் சேர்க்கப்படவுள்ள ஸ்டீல்த் ஃபிரிகேட் தமால் குழுவினர் ரஷ்யாவின் கலினின்கிராட்டில் யோகா பயிற்சிகளையும் நடத்தினர்.
கடற்படை நலன் மற்றும் நல்வாழ்வு சங்கம் , கடற்படை வீரர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்புத் துறையினர் யோகாவை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்வதற்கான யோகா பிரச்சாரத்தை வழிநடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2138579
****
RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2138713)
வருகையாளர் எண்ணிக்கை : 34