சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலா அமைச்சகம் சார்பில் தில்லி குதுப் மினார் வளாகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

प्रविष्टि तिथि: 21 JUN 2025 11:57AM by PIB Chennai

இந்தியாவின் நல்வாழ்வு மரபுகளின் துடிப்பான கொண்டாட்டமாக, மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ், செயல்படும் தில்லி இண்டியா டூரிசம், 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான குதுப் மினார் வளாகத்தில் நடத்தியது. புல்வெளிகளில் ஒரு பிரமாண்டமான மக்கள் யோகா அமர்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

யோகா நிபுணர் திரு கோபால் ரிஷி மற்றும் அவரது குழுவினர் யோகா ஆசனங்கள் மற்றும் பிராணயாம நுட்பங்களை விளக்கி பங்கேற்பாளர்களை வழிநடத்தினர். திரு ரிஷி நிகழ்ச்சியில் உரையாற்றினார். மனத் தெளிவிலும், உடல், உயிர், ஆன்மீக சமநிலையிலும் யோகாவின் ஆழமான தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார்.

400-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இந்த அமர்வில் பங்கேற்றனர். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் டி-சர்ட்கள், தொப்பிகள், யோகா பாய்கள் விநியோகிக்கப்பட்டனஇந்தக் கொண்டாட்டம் அமைதி, நல்வாழ்வு மற்றும் கலாச்சார பெருமை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது

****

Release ID: 2138264)

AD/PLM/RJ


(रिलीज़ आईडी: 2138640) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी