புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
சுந்தர் நர்சரியில் 11வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிய ஐஆர்இடிஏ
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2025 10:50AM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஐஆர்இடிஏ, புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் 11வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் தீவிரமாக பங்கேற்றது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், பிற துறைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு, இந்த ஆண்டின் உலகளாவிய கருப்பொருளான "ஒரு பூமிக்கு யோகா, ஒரு ஆரோக்கியம்" என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. இது தனிநபர் நல்வாழ்வு மற்றும் பூமி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டியது.
இந்த நிகழ்வில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி; நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் திருமதி நிதி கரே; மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர்திரு சஞ்சீவ் சோப்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமான மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யோகா அமர்வில் பங்கேற்றனர், இது ஆரோக்கியம், மனநிறைவு மற்றும் இயற்கையுடன் நல்லிணக்கம் ஆகியவற்றின் கூட்டு மனப்பான்மையை வளர்த்தது.
ஐஆர்இடிஏவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், ஐஆர்இடிஏவின் இயக்குநர் (நிதி) டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்வில் தீவிரமாகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில், உடல், மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்த யோகாவை தினசரி பயிற்சியாக ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை திரு தாஸ் வலியுறுத்தினார், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொது சேவையின் துடிப்பான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்களுக்கு. தேசத்திற்கான சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி தீர்வுகளை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்துடன், முழுமையான நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஐஆர்இடிஏவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
****
(Release ID: 2138232)
AD/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2138634)
வருகையாளர் எண்ணிக்கை : 30