தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியா அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கிக்கு டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வழங்கி நிதியமைச்சகம் கௌரவிப்பு
Posted On:
20 JUN 2025 5:01PM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்தை விரிவுபடுத்துவதில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமெண்ட்ஸ் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி ஆகியோர் இணைந்து வழங்கினர். புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு ஆர். விஸ்வேஸ்வரன் மற்றும் அந்த வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு குர்ஷரன் ராய் பன்சால் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர்.
2024–25-ம் நிதியாண்டிற்கான செயல்திறன் குறியீட்டில் நாட்டில் உள்ள பேமெண்ட்ஸ் வங்கிகளில் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி முதல் இடத்தைப் பிடித்து இந்த விருதைப் பெற்றுள்ளது.
இந்த வங்கியின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் காகிதப் பயன்பாடற்ற டிஜிட்டல் முறையிலான சேவைகளை எளிதாகவும் பாதுகாப்பான முறையிலும் செயல்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான வங்கிச் சேவைகளை எளிதாக்குவதில் இந்த வங்கி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வங்கியின் நிதிசார் சேவைகள் 13 இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள 5.57 லட்சம் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் வங்கிச் சேவைகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138023
***
(Release ID: 2138023)
AD/SV/KPG/KR/DL
(Release ID: 2138080)
Visitor Counter : 3