வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற சூழல்களை உருவாக்கி முன்னணி முதலீட்டாளர்கள், புத்தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: மத்திய வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
17 JUN 2025 1:13PM by PIB Chennai
ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய தொழில்துறை வழித்தட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் தொழில்துறை முனையங்களின் முன்னேற்றத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இது தொடர்பாக 2025 ஜூன் 15, அன்று குண்டூரில் உள்ள புகையிலை வாரியத்தில் ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்த ஆய்வு மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய முனையங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தியது. சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தின் கீழ் உள்ள கிருஷ்ணபட்டணம் தொழில்துறை பகுதி, ஹைதராபாத்-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தின் கீழ் உள்ள ஓர்வக்கல் தொழில்துறை பகுதி மற்றும் விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தின் கீழ் உள்ள கோப்பர்த்தி தொழில்துறை பகுதி ஆகியவை இதில் அடங்கும்.
ஒவ்வொரு தொழில்துறை முனையங்களிலும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற சூழல்களை உருவாக்குவதன் மூலம், முன்னணி முதலீட்டாளர்கள், புத்தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துமாறு திரு கோயல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடக்ககட்ட நிலையில் இயங்கும் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும், வலுவான புத்தொழில் நிறுவன சூழலை எளிதாக்குவதற்கும் அர்ப்பணிப்புள்ள தொழில் காப்பகங்களை நிறுவுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய கூட்டாண்மைகளின் அவசியத்தை எடுத்துரைத்த திரு கோயல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நாடு தழுவிய அளவில் முதலீட்டு மாநாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136887
***
VL/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2136957)
आगंतुक पटल : 15