சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இரண்டாவது கொள்கை வகுப்பாளர்கள் மன்றத்தின் தொடக்க அமர்வில் மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் ரசாயனம் & உரங்கள் இணையமைச்சர் திருமதி. அனுபிரியா பட்டேல் உரை
Posted On:
16 JUN 2025 2:42PM by PIB Chennai
மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் ரசாயனம்& உரங்கள் இணையமைச்சர் திருமதி. அனுப்ரியா படேல், இந்திய மருந்தியல் ஆணையம் இன்று ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது கொள்கை வகுப்பாளர்கள் மன்றத்தின் தொடக்க அமர்வில், சிறப்புரையாற்றினார்.
இந்திய மருந்துப் பொருள் தொகுதித்துறையை அங்கீகரிப்பதையும், இந்தியாவின் மலிவு விலை மருந்துகளை வழங்கும் பிரதமரின் மக்கள் சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த அமர்வானது, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய மருந்தியல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரிகளின் சர்வதேசக் குழுவினர் இந்த அமர்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த அமர்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணையைமைச்சர் திருமதி அனுபிரியா பட்டேல், தரமான மருந்துகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார், சர்வதேச அளவில் சுகாதார சமத்துவத்தை எளிதாக்கும் வகையில், ஒழுங்குமுறை தரப்படுத்தலின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்தியா சுகாதாரத் தீர்வுகளுக்கான உலகளாவிய மையமாக உருவெடுத்துள்ளதாகவும், அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு, சுகாதார ஒத்துழைப்பு மூலம் நாடுகளுடனான அதன் உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், "மக்கள் மருந்தகங்கள் மக்கள் அனைவருக்கும் தரமான மற்றும் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதாகக் கூறினார். இது மக்களின் செலவுகளைக் குறைக்கும் மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்று" என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்த அமைச்சர், "தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பின் மொத்த தடுப்பூசிகளில் 70% இந்தியாவிலிருந்து பெறப்படுகின்றன" என்றும் குறிப்பிட்டார். கொரோனா தொற்றுக் காலத்தில், இந்தியா தடுப்பூசி வழங்கும் முயற்சியைத் தொடங்கியதுடன், 100க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியதாகவும், இது உலக சுகாதாரம் குறித்த இந்தியாவின் ஆழ்ந்த பொறுப்புணர்வு மற்றும் நட்பு நாடுகளுக்கு உதவும் நோக்கத்தை எடுத்துரைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"பொது மருந்து உற்பத்தியில், இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளதாகவும் அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 14% இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்களின் பொது மருந்துகளில் 70% ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்வதை தங்கள் மருந்தக விதிமுறைகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது, உலகில் 15 நாடுகள் இந்திய மருந்துகளை தரம் வாய்ந்தவையாக அங்கீகரித்துள்ளதாகவும், அண்மையில் இந்திய மருந்தகத்தை அங்கீகரித்த 15வது நாடு கியூபா என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136620
***
AD/TS/GK/LDN/KR
(Release ID: 2136718)