தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்ப பிரிவில் புத்தொழில் நிறுவனங்களுக்கான அதிநவீன தொழில் காப்பக திட்டமான ‘சமர்த்’ திட்டத்தின் கீழ், குழு 1-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 புத்தொழில் நிறுவனங்களுக்கு டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் மானியங்களை வழங்குகிறது
Posted On:
16 JUN 2025 2:43PM by PIB Chennai
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பியல் தொழில்நுட்பத் துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஒரு அதிநவீன தொழில் காப்பக திட்டமான ‘சமர்த்’ திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. முதல் கட்டத்தில், போட்டி செயல்முறை மூலம் குழு 1-ல் 18 புத்தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி மானியம், முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக இடம் மற்றும் தில்லி, பெங்களூரு வளாகங்களில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மைய ஆய்வக வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அணுகல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தைத் தொடங்குவதற்காக, டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் அதன் "சமர்த்" தொழில் காப்பகத் திட்டத்தின் முதல் குழுவிற்கு வழிகாட்டுதல் அமர்வை புதுதில்லியில் உள்ள டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மைய வளாகத்தில் நடத்தியது. இந்த முயற்சி, புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி மானியம், மேம்பட்ட வளங்கள் மற்றும் சிந்தனையிலிருந்து வணிகமயமாக்கலுக்கு மாறுவதற்கான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் நிலையான மற்றும் அளவிடக்கூடிய வணிக மாதிரிகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
"சமர்த்" தொழில் காப்பகத் திட்டம், தொலைத்தொடர்பு பயன்பாடுகள், சைபர் பாதுகாப்பு, 5ஜி/6ஜி தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்களில் பணிபுரியும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது. இந்தத் திட்டம் ஆறு மாத காலம் இரண்டு குழுக்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் அதிகபட்சமாக 18 புத்தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் இந்த முயற்சியின் கீழ் அதிகபட்சமாக 36 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136619
***
AD/TS/IR/RR/KR
(Release ID: 2136695)