ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் வேளாண்-ட்ரோன் உள்நாட்டு உற்பத்தி மையம் மற்றும் 300 உயர்திறன் சிறப்பு மையங்களை மத்திய இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் சென்னையில் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2025 2:42PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய வேளாண்-ட்ரோன் உள்நாட்டு உற்பத்தி மையத்தைத் தொடங்கி வைத்தார். 300 உயர் திறன் சிறப்பு மையங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார். விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ ஒப்புதல் அளித்த, கருடா ஏரோஸ்பேஸின் பயிற்சியாளர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு முயற்சிகளைப் பாராட்டினார். இந்தியாவை உலகளாவிய ட்ரோன் உற்பத்தி மையமாக மாற்றுவது பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைகளில் ஒன்று என அவர் கூறினார்.
கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் பேசுகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் ட்ரோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்வது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்றார். இந்த நிறுவனம் இதுவரை வரை 4,000 ட்ரோன்களை உற்பத்தி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
35,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள கருடா ஏரோஸ்பேஸின் அதிநவீன வேளாண் ட்ரோன் உள்நாட்டு உற்பத்திக்கான வசதி, மேம்பட்ட ஆளில்லா வான்வழி அமைப்புகளின் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனைக்கான மையமாகும். மறுபுறம், பயிற்சித் திட்டமும் கருடா ஏரோஸ்பேஸின் முதன்மையான முயற்சியாகும். இது கல்வியாளர்கள், நிபுணர்களை சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பயிற்றுனர்களாக மாற்றும். இந்தியா முழுவதும் 300 உயர் திறன் சிறப்பு மையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து, வலுவான கட்டமைப்பு மூலம் ட்ரோன் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டை மேம்படுத்தும்.
*******
(Release ID: 2136325)
AD/PLM/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2136375)
வருகையாளர் எண்ணிக்கை : 38