எரிசக்தி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், கோரக்பூர் ஹரியானா அனு வித்யுத் பரியோஜனா-வைப் பார்வையிட்டு, அணுசக்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்
Posted On:
14 JUN 2025 4:40PM by PIB Chennai
அணுசக்தித் துறையின் கீழ் இந்திய அணுசக்தி கழகம் செயல்படுத்தும் அணுசக்தித் திட்டமான கோரக்பூர் ஹரியானா அனு வித்யுத் பரியோஜனா திட்டத்தின் முன்னேற்றத்தை மத்திய மின்துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தத் திட்டம் 4 x 700 மெகாவாட் அழுத்தப்பட்ட கன நீர் உலைகள் (PHWRs) அமைப்பதை உள்ளடக்கியது. இத்திட்டம் நிறைவடைந்ததும், இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 50% ஹரியானா மாநிலத்திற்கு ஒதுக்கப்படும். இது அந்த மாநிலத்தின் மின் திறனை கணிசமாக அதிகரிக்கும்.
இந்திய அணுசக்தி கழகத்தின் முயற்சிகளைப் பாராட்டிய அமைச்சர் திரு மனோகர் லால், நாட்டின் எதிர்காலத்திற்கு சுத்தமான, பாதுகாப்பான, நம்பகமான மின்சக்தியை உற்பத்தி செய்வதில் அணுசக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
*****
(Release ID: 2136359)
AD/PLM/SG
(Release ID: 2136373)