புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2025 மே மாதத்திற்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் விலை குறியீட்டு எண் (2012-ம் ஆண்டின் 100 என்ற அடிப்படையில்)
Posted On:
12 JUN 2025 4:00PM by PIB Chennai
I. முக்கிய சிறப்பம்சங்கள்:
2024 மே மாதத்துடன் ஒப்பிடும் போது, 2025மே மாத பணவீக்க விகிதம் ஆண்டுக்கு ஆண்டு என்ற முறையில் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் 2.82% ஆக உள்ளது. 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் பணவீக்கம் 34 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது. 2019 பிப்ரவரி மாதத்திற்கு பிறகு இது மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.
2024 மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025 மே மாதத்திற்கான உணவு பணவீக்க விகிதம் 0.99%-ஆக இருந்தது. 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் உணவுப் பணவீக்க விகிதம் 79 அடிப்படைப் புள்ளிகள் சரிவுடன் காணப்படுகிறது.
2025 மே மாத பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், இறைச்சி, தானியங்கள், சர்க்கரை, முட்டை போன்றவற்றின் பணவீக்கம் குறைந்ததே முக்கியக் காரணமாகும்.
2025 ஏப்ரல் மாதத்தில் 2.59% ஆக இருந்த கிராமப்புற உணவுப் பணவீக்கம் 2025 மே மாதத்தில் மாற்றமின்றி 2.59% ஆகவே காணப்பட்டது.
2025 ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற பணவீக்கம் 3.36%-மாக இருந்த நிலையில், 2025 மே மாதத்தில் அது 3.07%-ஆக குறைந்து காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2025 ஏப்ரல் மாதத்தில் 1.64%-லிருந்து 2025 மே மாதத்தில் 0.96% ஆக குறைந்துள்ளது.
2025 மே மாதத்தில் வீட்டுவசதி பணவீக்க விகிதம் 3.16% ஆக இருந்தது. இது 2025 ஏப்ரல் மாதத்தில் விகிதம் 3.06% ஆக இருந்தது.
2025 மே மாதத்திற்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற கல்வி பணவீக்க விகிதம் 4.12%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் 4.13%-ஆக இருந்தது.
2025 மே மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதார பணவீக்க விகிதம் 4.34%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் 4.25%-ஆக இருந்தது.
2025 மே மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பணவீக்க விகிதம் 3.85%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் விகிதம் 3.67%-ஆக இருந்தது.
2025 மே மாதத்திற்கான கிராமப்புற மற்றும் நகர்ப்புற எரிபொருள் மற்றும் மின் கட்டண பணவீக்க விகிதம் 2.78%-ஆகும். இது 2025 ஏப்ரல் மாதத்தில் 2.92%-மாக இருந்தது.
***
(Release ID: 2135927)
AD/TS/PLM/RR/KR
(Release ID: 2135997)