அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

‘மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை முறைகளின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு

Posted On: 10 JUN 2025 6:05PM by PIB Chennai

பயனாக்க சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (திஷ்டி) இன்று அதன் வளாகத்தில் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சை முறைகளின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு குறித்த  கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்த நிகழ்வு மருந்துத் துறை, புத்தொழில்  நிறுவனங்கள்பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் முன்னணி நிபுணர்களை அறிவியல் அறிவு பரிமாற்றத்திற்காகவும், இந்தியாவில் மோனோக்ளோனல் ஆன்டிபாடி  சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான புதுமையான மாதிரிகளை ஆராய்வதற்காகவும் ஒன்றிணைத்தது.

இந்தியாவின் வளர்ந்து வரும் உயிரி மருந்துத் துறையையும், இந்த முக்கியமான பகுதியில் உள்நாட்டு கண்டுபிடிப்புக்கான மகத்தான ஆற்றலையும் இந்த கருத்தரங்கு எடுத்துக் காட்டியது. புதுமை மற்றும் கண்டுபிடிப்பின் ஆரம்ப கட்டங்களிலிருந்து தொடங்கி, மலிவு மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க, தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்கு இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பின் அவசரத் தேவை என்பது விவாதங்களின் முக்கிய சிறப்பம்சமாக இருந்தது.

வரவேற்பு உரையில், திஷ்டி-யின் டீன் பேராசிரியர் ஜெயந்த பட்டாச்சார்யா, புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கட்டத்தில் தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான ஆரம்பகால ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும் உள்நாட்டு மற்றும் மலிவு விலை தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இதுபோன்ற கூட்டாண்மைகள் மிக முக்கியமானவை என்று அவர் எடுத்துரைத்தார்.

 

திஷ்டி-யின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் ஜி. கார்த்திகேயன், மோனோக்ளோனல் ஆன்டிபாடி துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைத்தார். தற்போதைய தருணம் மிகவும் முக்கியமானது என்றும், ஆதரவான கொள்கைகள் நடைமுறையில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையும் தொழில்துறையும் ஒன்றிணைந்து ஒத்துழைக்கக்கூடிய தொகுப்புகளை நிறுவுவது அவசியம் என்றும் பேராசிரியர் கார்த்திகேயன் வலியுறுத்தினார். திறமையான பணியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான வளமான நிலமாக இவை செயல்படும் என்றும், இது போன்ற கருத்தரங்குகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைப்பதில் கருவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135445

***

(Release ID: 2135445)
AD/TS/PKV/DL


(Release ID: 2135489) Visitor Counter : 4