அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பூமிக்கு அடியில் துளையிடும் கருவியை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஆதரவு

Posted On: 09 JUN 2025 4:58PM by PIB Chennai

நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் இயந்திர உற்பத்திக்கான  திறன்களை வலுப்படுத்தும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், ஹைதராபாதில் உள்ள ஆட்டோகிரேசி மிஷினரி என்ற தனியார் நிறுவனத்திற்கு “நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான வர்த்தகமயமாக்கல்” திட்டத்திற்கு நிதியுதவியை வழங்கியுள்ளது.  நாட்டில் பூமிக்கு அடியில் துளையிடும் இயந்திரத்தை உள்நாட்டிலேயே வடிவமைக்க உதவிடும் வகையில் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது.

கண்ணாடி இழைநார் கேபிள்கள், நீர், எரிவாயு குழாய்களை அமைப்பதிலும் பூமிக்கு அடியில் துளையிடும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் சூரிய எரிசக்தி, விவசாயம், பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்த துளையிடும் எந்திரங்களின் பயன்பாடு முக்கியத்தும் வாய்ந்ததாக உள்ளது. இத்தகைய எந்திரங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தபோதிலும், இந்தியாவின் சூழலுக்கு பொருந்தாதவைகளாக உள்ளதால் இத்தகைய எந்திரங்களை உள்நாட்டிலேயே வடிவமைப்பதை ஊக்குவிப்பதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஆட்டோகிரேசி மெஷினரி என்ற தனியார் நிறுவனம் உள்நாட்டிலேயே ருத்ரா 100எக்ஸ்டி, ருத்ரா 100, கஜா 200 எக்ஸ்டி, துருவா 100, மற்றும் விஏஎச் 150 -  போன்ற பல்வேறு துளையிடும் எந்திரங்களை வடிவமைத்துள்ளது.

உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இதுபோன்ற நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.

 

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன்  மேற்கொள்ளப்பட்டு வரும் உத்திசார் நடவடிக்கைகள் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கு வித்திடும்.

இதுபோன்ற எந்திரங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்படுவதன் மூலம் இறக்குமதி சார்ந்திருக்கும் நிலை குறையும்.

சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் எந்திரங்கள்  பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2135141

***

AD/TS/VS/AG/DL


(Release ID: 2135203) Visitor Counter : 2
Read this release in: English , Hindi , Urdu