வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய தரக் கவுன்சில் உலக தர மதிப்பீடு அங்கீகார தினம் 2025-ஐ புதுதில்லியில் கொண்டாடியது
Posted On:
09 JUN 2025 4:12PM by PIB Chennai
இந்தியாவில் தேசிய தர மதிப்பீடு அங்கீகார பாதுகாப்பு அமைப்பான இந்திய தரக் கவுன்சில் உலக தர மதிப்பீடு அங்கீகார தினம் 2025-ஐ புதுதில்லியில் கொண்டாடியது.
சர்வதேச ஆய்வுக் கூட அங்கீகார கழகம், சர்வதேச அங்கீகார அமைப்பு போன்ற உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து இந்திய தரக் கவுன்சில் தனது பரிசோதனை மற்றும் மதிப்பாய்வு கூடங்களின் தேசிய அங்கீகார வாரியம் (என்ஏபிஎல்), சான்றளிப்பு அமைப்புகளுக்கான தேசிய அங்கீகார வாரியம் ஆகியவற்றின் மூலம் உலக அங்கீகார தினம் 2025-ஐ கொண்டாடியது.
புதுப்பிக்கப்பட்ட என்ஏபிஎல் இணையப் பக்கத்தையும் தொடங்கியது என்பது இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக இருந்தது. அங்கீகார நடைமுறையை ஒழுங்குபடுத்துவதும், டிஜிட்டல் அணுகலை, குறிப்பாக ஆய்வகங்கள் மற்றும் எம்எஸ்எம்இ-களுக்கான டிஜிட்டல் அணுகலை விரிவுபடுத்துவதும் இதன் நோக்கமாகும்.
“அங்கீகாரச் சான்று: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல்” என்ற இந்த ஆண்டின் மையப்பொருள், போட்டித்தன்மை, சந்தை அணுகல், எம்எஸ்எம்இ-களுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றை விரிவுபடுத்துவதில் அங்கீகாரச் சான்றிதழின் பங்கினை வலியுறுத்துகிறது. தலைமைத்துவத்திலிருந்து முக்கியச் செய்திகள், மையப்பொருள் குறித்த வீடியோ வெளியீடு ஆகியவற்றுடன் நிகழ்வு தொடங்கியது. இது எம்எஸ்எம்இ-களில் தரம், புதிய கண்டுபிடிப்பு, நீடித்த வளர்ச்சி குறித்த பேச்சுவார்த்தைக்கான தளத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் தொழில் வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா, இந்திய தரக் கவுன்சில் தலைவர் திரு ஜக்சாய் ஷா ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135119
***
AD/TS/SMB/RR/KR/DL
(Release ID: 2135189)