வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கவும், தூய்மைச் சேவைகளை மேம்படுத்தவும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் புதிய மாதிரி ஒப்பந்த சட்டகவரைவு

Posted On: 06 JUN 2025 4:35PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின்  கீழ் இயங்கும் தூய்மை இந்தியா இயக்கம் -நகர்ப்புறம் , தனியார் தூய்மைப் பணி ஆபரேட்டர்களை  ஈடுபடுத்துவதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்ட மாதிரி குழு  மற்றும் ஒப்பந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 42 கோடி நகர்ப்புற மக்களில், சுமார் 50% (4.5 கோடி குடும்பங்கள்) கழிவுநீர் தொட்டிகளைப் பயன்படுத்துகின்றன. நியமிக்கப்பட்ட சுத்திகரிப்பு இடங்களில் மலக் கசடுகளைப் பாதுகாப்பாக அகற்றி அப்புறப்படுத்துவதற்கு வழக்கமான கழிவுநீர் அகற்றும் சேவைகளின் முக்கியமான தேவையை இது குறிக்கிறது. சுமார் 35% மக்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு திறமையான கழிவுநீர் ஓட்டத்திற்கு வழக்கமான பராமரிப்பு தேவைப்படும் கழிவுநீர் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் அமைப்புகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் இரண்டையும் வழக்கமாக சுத்தம் செய்ய வேண்டும் - கழிவுநீர் அடைப்புகளிலிருந்து சுத்தம் செய்ய வேண்டும், மேலும் குவிந்துள்ள மலக் கழிவுகளை அகற்ற ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களால் வழங்கப்படும் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் தொட்டி சேவைகளை தொழில்முறைமயமாக்கவும், கழிவுநீர்  தொட்டிகளை இயந்திரமயமாக்கி சுத்தம் செய்வதையும் தனியார் ஆபரேட்டர்களுக்கு  ஒப்படைப்பதற்கான மாதிரி ஒப்பந்த வரைவு சட்டகத்தை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்  உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு, கையால் துப்புரவு செய்பவர்களாக பணியமர்த்தப்படுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு  சட்டம், 2013 இன் படி பாதுகாப்பான, இயந்திரமயமாக்கப்பட்ட சேவைகளை வழங்குவதற்கான தெளிவான சட்டம் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாதிரி ஆவணங்கள் குடிமக்கள் தொழில்முறை கழிவுநீர் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134547

---

Release ID: 2134547

AD/TS/PKV/DL  


(Release ID: 2134666)
Read this release in: English , Urdu , Hindi