பாதுகாப்பு அமைச்சகம்
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தேசிய மாணவர் படையினருக்கு தில்லியில் உற்சாக வரவேற்பு
Posted On:
05 JUN 2025 6:07PM by PIB Chennai
2025 மே 18 அன்று உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த தேசிய மாணவர் படையினருக்கு (என்சிசி) இன்று (05.06.2025) புதுதில்லியில் உள்ள என்சிசி தலைமை இயக்குநர் அலுவலக முகாமில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து சிறுவர்கள், ஐந்து சிறுமிகளை கொண்ட பத்து பேர் கொண்ட குழு எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தது.
துணிச்சல், மீட்சித்தன்மை, குழுப்பணி ஆகியவற்றை இக்குழுவினர் வெளிப்படுத்தினர். கடுமையான வானிலை, கடினமான நிலப்பரப்பு போன்றவற்றிற்கு இடையிலும் சிகரத்தை அடைந்து இவர்கள் சாதனை படைத்தனர்.
ஏப்ரல் 03, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்து இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். இந்தப் பயணத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட்டன.
***
(Release ID: 2134270)
AD/TS/PLM/AG/DL
(Release ID: 2134319)