பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 04.06.2025 அன்று 13-வது ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2025 4:55PM by PIB Chennai
புதுதில்லி விஞ்ஞான் பவனில் 04.06.2025 அன்று 13-வது ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமை தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இத்தகைய குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதற்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்த முயற்சி ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதுடன் அரசின் செயல்பாடுகளையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை, நிதி, வர்த்தகம், தணிக்கைத் துறை, ரயில்வே, வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், சிவில் விமானப் போக்குவரத்து வெளியுறவு போன்ற பல்வேறு அமைச்சகங்ளின் கீழ் செயல்பட்டு வரும் 19 துறைகளைச் சேர்ந்த குடும்ப ஓய்வூதிய விவகாரங்கள் தொடர்பான 415 குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றில் 325 குறைகளுக்கு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டன. இந்த முகாம் ஓய்வூதியதாரர்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்குவதில் அதன் செயல் திறனை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
04.06.2025 அன்று நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2134200
-----
AD/TS/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2134317)
வருகையாளர் எண்ணிக்கை : 18