சுரங்கங்கள் அமைச்சகம்
2025-26-ம் நிதியாண்டில் வளர்ச்சிப் பாதையில் செல்லும் கனிம, இரும்பு அல்லாத உலோக உற்பத்தி
Posted On:
04 JUN 2025 3:56PM by PIB Chennai
மார்ச் 2025-க்கான சுரங்க, குவாரித் துறைக்கான கனிம உற்பத்தி குறியீடு 156.8 ஆக இருந்தது. இது மார்ச் 2024-ஐ விட 0.4% அதிகரித்துள்ளது. இரும்புத் தாது, மாங்கனீசு தாது, துத்தநாக செறிவு போன்ற கனிமங்கள் மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது மார்ச் 2025-ல் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இரும்புத் தாது உற்பத்தி 5.7% அதிகரித்து 25.9 மில்லியன் மெட்ரிக் டன் ஆக இருந்தது. மார்ச் 2024-ஐ விட மார்ச் 2025-ல் மாங்கனீசு தாது உற்பத்தி 9.7% அதிகரித்து 0.39 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும், துத்தநாக அடர்வு உற்பத்தி 5.5% அதிகரித்து 0.19 மில்லியன் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
2024-25-ம் நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய நிலையில், 2025-26-ம் நிதியாண்டில் நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி தொடர்ந்து வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2025-26 நிதியாண்டின் முதல் மாதத்திற்கான (ஏப்ரல்) தற்காலிக மதிப்பீடுகளின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்டதை விட இந்த கனிமங்களின் உற்பத்தியில் நிலையான அதிகரிப்பு உள்ளது. 2024 ஏப்ரல் மாதத்தில் 1.87 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த பாக்சைட் உற்பத்தி, ஏப்ரல் 2025-ல் 2.13 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 13.9% வளர்ச்சியாகும். சுண்ணாம்புக்கல் உற்பத்தி, ஏப்ரல் 2024-ல் 39.58 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்ததிலிருந்து, ஏப்ரல் 2025-ல் 40.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 1.2% வளர்ச்சியாகும்.
இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2025-26-ம் நிதியாண்டில் முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 1.5% வளர்ச்சியைப் பதிவு செய்து, 2025-26-ம் நிதியாண்டில் (ஏப்ரல்) 3.47 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது, இது 2024-25-ம் நிதியாண்டில் (ஏப்ரல்) 3.42 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது.
இந்தியா உலகில் 2-வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தியில் முதல் 10 இடங்களுக்குள்ளும் உள்ளது. அலுமினியம், தாமிரம் ஆகியவற்றின் தொடர்ச்சியான உற்பத்தி அதிகரிப்பு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும்.
***
(Release ID: 2133798)
AD/SM/PLM/RR/KR
(Release ID: 2133850)