அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்- இந்திய பெட்ரோலிய ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சீர்திருத்தங்களை நித்தி ஆயோக் முன்மொழிந்துள்ளது
Posted On:
04 JUN 2025 12:04PM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆர்- இந்திய பெட்ரோலிய ஆய்வு நிறுவனத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை சீரமைப்பதற்கான இரண்டாவது தேசிய கலந்தாய்வு கூட்டம் இன்று தொடங்கியது. இந்த 2 நாள் கூட்டத்திற்கு நித்தி ஆயோகின் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத் தலைமை தாங்கினார். லக்னோவில் உள்ள ஆளுநர் மாளிகையில் 2025 மே மாதம் நடைபெற்ற முதலாவது கலந்தாய்வு கூட்டத்தின் முடிவுகள் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. பிராந்திய அளவிலான கூட்டங்களில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலின் சவால்களை எதிர்கொள்வது பற்றி கலந்தாலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை செயலாளரும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என் கலைசெல்வி, இந்திய தேசிய அறிவியல் கல்விக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் அஷூதோஷ் சர்மா, சிஎஸ்ஐஆர்- இந்திய பெட்ரோலிய ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் ஹரீந்தர் சிங் பிஷ்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடக்க அமர்வில் பேசிய டாக்டர் வி கே சரஸ்வத், அறிவியல் ஆராய்ச்சி என்பது அதிகார அமைப்புகளால் ஏற்படும் தாமதங்களிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட முடிவு உருவாக்கம், உரிய நேரத்தில் நிதியளிப்பு, செயல்பாட்டு அடிப்படையில் பதில்சொல்லும் கடமை ஆகியவற்றால் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றார். பங்குதாரர்களுடன் தொடர்ச்சியான ஈடுபாடு, சான்று அடிப்படையிலான கொள்கை பரிந்துரைகள் ஆகியவற்றின் மூலம் முறைப்படியான சீர்திருத்தத்தை செயல்படுத்த நித்தி ஆயோக் உறுதிபூண்டிருப்பதாக டாக்டர் சரஸ்வத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133720
***
(Release ID: 2133720)
AD/SM/SMB/AG/KR
(Release ID: 2133730)
Visitor Counter : 6