கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒஸ்லோவில் உள்ள நார்-ஷிப்பிங்கில் ‘இந்தியா அரங்கம்’ மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மற்றும் நோர்வேயின் பட்டத்து இளவரசரால் திறந்து வைக்கப்பட்டது

Posted On: 03 JUN 2025 6:50PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், இன்று ஒஸ்லோவில் நார்வே பட்டத்து இளவரசர் ஹாகோனுடன் இணைந்து, இன்று ஒரு பிரீமியம் உலகளாவிய கடல்சார் நிகழ்வான நார்-ஷிப்பிங்கில் இந்திய அரங்கைத் திறந்து வைத்தார். இந்த முதன்மையான உலகளாவிய கடல்சார் நிகழ்வில் இந்தியாவின் முதல் பங்கேற்பைக் குறிக்கும் வகையில், இந்த அரங்கம் நாட்டின் கடல்சார் வலிமைகளை வெளிப்படுத்தவும், சர்வதேச கடல்சார் நிறுவனங்களுடன் கூட்டணிகளையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கான ஒரு தளமாக செயல்படவும், இந்தத் துறையில் இந்தியாவின் திறன்களை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரங்கில் உள்ள ஸ்டால்களை இருவரும் பார்வையிட்டபோது, இந்தியாவின் கடல்சார் மரபு பற்றி பட்டத்து இளவரசர் விசாரித்தார், மேலும் 'இந்தியாவின் நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த  கடல்சார் வரலாறு, நோர்வே வைக்கிங் கடல்சார் பாரம்பரியத்தை விட பழமையானது' என்று கூறினார்.  மத்திய அமைச்சர், பட்டத்து இளவரசருக்கு இந்திய அரங்கில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் (என்ஹெச்எம்சி) மாதிரியைக் காண்பித்தார், இது நார்வே இளவரசரால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சோனோவால், “இந்தியா 5,000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு புகழ்பெற்ற கடல்சார்வரளாரைக் கொண்டுள்ளது - சிந்து சமவெளியின் கப்பல்துறை தளங்கள் முதல் தெற்கு கடற்கரையின் துடிப்பான மசாலா வர்த்தகம் வரை இதில் அடங்கும். இதற்கு ஏற்ப, குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் என்ற உலகத் தரம் வாய்ந்த நிறுவனத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்தியாவும் நார்வேயும் இணைந்து நிலையான, உள்ளடக்கிய மற்றும் பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய கடல்சார் எல்லையை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”

இந்தியா அரங்கிற்கு விஜயம் செய்தபோது, ​​இந்தியாவின் சமீபத்திய பொருளாதார செயல்திறனில் பட்டத்து இளவரசர் மிகுந்த ஆர்வம் காட்டினார், மேலும் இந்த ஆண்டு நாட்டின் வலுவான வருடாந்திர வளர்ச்சி 8% ஐத் தாண்டியதற்கு பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிற்கான  தனது பயணத்தை பட்டத்து இளவரசர் உறுதி செய்தார். மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், ஹரப்பா நாகரிகத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு நினைவுப் பலகையை பட்டத்து இளவரசருக்கு வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133612 

 

***

(Release ID: 2133612)

AD/RB/DL


(Release ID: 2133666)
Read this release in: English , Urdu , Hindi