விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பின் மூலம் வேளாண் மாற்றத்தை ஊக்குவிக்க புதிய உயர் சிறப்பு மையம் தொடக்கம்

Posted On: 03 JUN 2025 6:07PM by PIB Chennai

பாதியளவு வறண்ட  வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனமான இக்ரிசாட், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்புடன் இணைந்து, இன்று புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பு குறித்த மாநாட்டின் போது, ​​வேளாண்மையில் தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்புக்கான இக்ரிசாட் உயர் சிறப்பு மையத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி உலகளாவிய தென்பகுதி நாடுகளின் வேளாண் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த அறிமுக விழாவில் இக்ரிசாட், தக்ஷின் எனப்படும் வளர்ச்சி மற்றும் அறிவு பகிர்வு முன்முயற்சிக்கு இடையே ஒரு உத்திசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த உயர் சிறப்பு மையம் நிறுவப்படுவது உலகளாவிய வேளாண் வளர்ச்சிக்கு ஒரு சிறப்பு தருணமாக அமையும். அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைந்த வேளாண் முறைகளை மேற்கொள்ளவும், பருவநிலை மற்றும் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளிடையே ஒத்துழைப்பை உருவாக்கவும் ஒரு பிரத்யேக தளமாக இந்த மையம் அமையும்.

***

(Release ID: 2133595)

AD/PLM/AG/DL


(Release ID: 2133614)
Read this release in: English , Urdu , Hindi