சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தேசிய தலைநகர் பகுதிக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து செங்கல் சூளைகளிலும் நெல் வைக்கோல் அடிப்படையிலான துகள்கள், கரித்துண்டுகளை இணைத்து சுடுவதை கட்டாயமாக்கும் உத்தரவு – காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்டது
Posted On:
03 JUN 2025 4:56PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்றின் தரம் மோசமடைவதற்குக் காரணமான திறந்தவெளி நெல் கழிவுகளை எரிக்கும் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, தலைநகரிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையம், சட்டப்பூர்வ உத்தரவு எண். 92-ஐ வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய தலைநகர் பகுதிக்கு வெளியே உள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து செங்கல் சூளைகளிலும் நெல் வைக்கோல் அடிப்படையிலான உயிரித் துகள்கள், கரித்துண்டுகள் பயன்படுத்துவதை கட்டாயமாக்குமாறு ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திறந்தவெளியில் நெல் கழிவுகளை எரிக்கும் நடைமுறையை ஒழிப்பதற்கான ஒரு வழியாக இது அமைந்துள்ளது. தொழில்துறையில் சுத்தமான, நிலையான எரிபொருள் மாற்றுகளை ஊக்குவிக்கும் வகையிலும், பயிர் எச்சங்களை திறந்தவெளியில் எரிப்பதை முழுமையாக நீக்குவதையும் ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நெல் வைக்கோல் அடிப்படையிலான துகள்கள், கரித்துண்டுகளை இணைத்து சுடுவதை நோக்கமாகக் கொண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டப்பூர்வ உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
01.11.2025 முதல் நெல் வைக்கோல் அடிப்படையிலான துகள்கள், கரித்துண்டுகளை 20% இணைத்து சுடவும், 01.11.2028-க்கு பிறகு இதை 50 சதவீதமாக உயர்த்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையை கட்டாயமாக்குவதற்கு தேவையான வழிமுறைகள்/ஆணைகளை வெளியிட பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களுக்கு இணங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
***
(Release ID: 2133553)
AD/SM/PLM/AG/KR
(Release ID: 2133582)