பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் மற்றும் நிகோபார் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை கமாண்டராக லெப்டினன்ட் ஜெனரல் தினேஷ் சிங் ராணா பொறுப்பேற்றார்.

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2025 9:00PM by PIB Chennai

அந்தமான் மற்றும் நிகோபார் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் 18-வது தலைமை கமாண்டராக  லெப்டினன்ட் ஜெனரல் தினேஷ் சிங் ராணா ஜூன் 01, 2025 அன்று பொறுப்பேற்றார். ஸ்ரீ விஜய புரத்தை தளமாகக் கொண்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் கட்டுப்பாட்டு மையம்உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தேசிய நலன்களைப் பாதுகாக்க ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல்படையை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கூட்டு சேவை செயல்பாட்டு கட்டளைப் பிரிவாகும்.

 

லெப்டினன்ட் ஜெனரல் ராணா டிசம்பர் 19, 1987 அன்று கர்வால் ரைபிள்ஸின் 10வது பட்டாலியனில் நியமிக்கப்பட்டார், பின்னர் அதே பட்டாலியனுக்குத் தலைமை தாங்கும் பெருமையைப் பெற்றார். கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் பட்டதாரியும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவருமான இவர், புதுதில்லியில் உள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரி, ஸ்பெயினின் மாட்ரிட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் மையம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் ஆவார். பல தொழில்முறை ராணுவப் படிப்புகளில் முதலிடம் வகிப்பதன் மூலம் அவரது கல்விச் சாதனை வேறுபடுகிறது.

 

தனது சிறப்பான சேவைக்காக, லெப்டினன்ட் ஜெனரல் ராணாவுக்கு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், யூத் சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் ராணுவத் தலைமைப் பாராட்டு அங்கீகாரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அவர்சீனாவின் பாதுகாப்பு நவீனமயமாக்கலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2133190

 

AD/BR/KR  

 

(Release ID: 2133190)


(வெளியீட்டு அடையாள எண்: 2133211) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी