சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தலைமையில் காசநோய் மற்றும் தட்டம்மை-ரூபெல்லா ஒழிப்பு முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும்,15வது நிதி ஆணையத்தின் கீழ் நிதி பயன்பாட்டை ஆய்வு செய்வதற்கும் 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 MAY 2025 7:28PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் உயர்மட்டக் கூட்டங்களை நடத்தினார். காசநோய் மற்றும் தட்டம்மை-ரூபெல்லா ஒழிப்பு மற்றும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் 15வது நிதி ஆணையத்தின் கீழ் நிதி பயன்பாட்டை அமைச்சர் ஆய்வு செய்தார்.
 
மத்தியப் பிரதேச துணை முதல்வர் திரு. ராஜேந்திர சுக்லா, உத்தராகண்ட் சுகாதார அமைச்சர் திரு. தன் சிங் ராவத், குஜராத் சுகாதார அமைச்சர் திரு. ருஷிகேஷ் படேல், ஜம்மு & காஷ்மீர் சுகாதார அமைச்சர் திரு. சகீனா மசூத் இட்டூ, மேகாலயா சுகாதார அமைச்சர் டாக்டர் மஸல் அம்பரீன் லிங்டோ, மேற்கு வங்க சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. சந்திரிமா பட்டாச்சார்யா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
100 நாள் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தில் மாநிலங்கள் தீவிரமாக பங்கேற்றதற்காக மத்திய அமைச்சர் பாராட்டினார். இந்த திட்டத்தின் போது 12.97 கோடி நபர்கள் காசநோய்க்காக பரிசோதிக்கப்பட்டனர். இதன் விளைவாக, நாடு முழுவதும் 7.19 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் 2.85 லட்சம் அறிகுறியற்ற நோயாளிகள் அடங்குவர். இந்த பிரச்சாரம் இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காசநோய் இருப்பதாகக் கருதப்படும் நோயாளிகளின் பரிசோதனை, சிகிச்சையின் வெற்றி விகிதங்கள் மற்றும் காசநோய் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த முக்கியமான அளவீடுகளைத் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதார அமைச்சர்களை அவர் வலியுறுத்தினார்.
 
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132874
****
(Release ID: 2132874) 
AD/RB/DL
                
                
                
                
                
                (Release ID: 2132909)
                Visitor Counter : 6