பாதுகாப்பு அமைச்சகம்
நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் மற்றும் ஆழமற்ற நீர்நிலைக் கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் கடைசி கப்பல் கட்டுமானப் பணி தொடங்கியது
प्रविष्टि तिथि:
30 MAY 2025 4:45PM by PIB Chennai
கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான தளத்தில் 8-வது மற்றும் கடைசி கப்பலை உருவாக்கும் பணி தொடங்கியது. நீர்மூழ்கி கப்பலைத் தாக்கும் மற்றும் ஆழமற்ற நீர்நிலைக் கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் இந்த கடைசி கப்பல் கட்டும் பணி வைஸ் அட்மிரல் ராஜாராம் சுவாமிநாதன் முன்னிலையில் 2025 மே 29 அன்று தொடங்கியது. இந்திய கடற்படை மற்றும் கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர். கடைசி கப்பலின் அனைத்து தளங்களும் உற்பத்தியின் மேம்பட்ட நிலைகளில் உள்ளன. 80% க்கும் அதிகமான உள்நாட்டு உபகரணங்களுடன், இந்த கப்பல்கள் இந்திய அரசின் தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய முன்முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தக் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்தால் 2019 ஏப்ரல் 30 அன்று கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இந்தத் தொகுப்பில் உள்ள எட்டு கப்பல்கள் 2025 ஆகஸ்ட் மற்றும் 2028 ஜூன் இடையில் இந்திய கடற்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை இந்தக் கப்பல்கள் மேம்படுத்தும்.
----
(Release ID 2132735)
AD/TS/GK/KPG/SG/DL
(रिलीज़ आईडी: 2132852)
आगंतुक पटल : 7