பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசக் கட்டுமான பாரம்பரியத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் தேசிய பாதுகாப்பு அகாடமியின் சாதனை – முதல் முறையாக 148-வது பயிற்சி வகுப்பை நிறைவு செய்த 17 பெண் வீராங்கனைகள்

Posted On: 30 MAY 2025 3:34PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு அகாடமி 2025 மே 30 அன்று ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. அகாடமியின் வசந்த கால 148-வது பயிற்சி வகுப்பின் கீழ் பயிற்சியை  நிறைவு  செய்த 336 பேர்களில் 17 பெண் வீராங்கனைகளும் இடம் பெற்றுள்னர். பயிற்சியை நிறைவு செய்த 336 வீரர் வீராங்கனைகளுடன் சேர்த்து மொத்தம் 1,341 பேர், புகழ்பெற்ற கேதர்பால் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்றனர். இன்று மகாராஷ்டிரா, கடக்வாஸ்லாவில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மிசோரம் ஆளுநர் டாக்டர் வி.கே. சிங் கலந்து கொண்டார்.

வீரர்கள் கடுமையான ராணுவ மற்றும் கல்விப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ததை இந்த அணிவகுப்பு எடுத்துக் காட்டியது. இது துல்லியம், ஒழுக்கம் மற்றும் ராணுவத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியது.

சிறப்பாக செயல்பட்டதை அங்கீகரிக்கும் விதமாக, பட்டாலியன் கேடட் துணைத் துலைவர் பிரின்ஸ் ராஜுக்கு குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கத்தையும், அகாடமி கேடட் கேப்டன் உதய்வீர் சிங் நேகிக்கு குடியரசுத்தலைவரின் வெள்ளிப் பதக்கத்தையும், பட்டாலியன் கேடட் கேப்டன் தேஜாஸ் பட்டுக்கு குடியரசுத்தலைவரின் வெண்கலப் பதக்கத்தையும் டாக்டர் வி.கே. சிங் வழங்கினார். ஒட்டுமொத்த சிறப்பு செயல்பாட்டுக்காக  தலைமைப் பணியாளர் பதாகை கோல்ஃப் படைக்கு வழங்கப்பட்டது.

இந்த அணிவகுப்பு நிகழ்வில் சேத்தக் ஹெலிகாப்டர்கள், சூப்பர் டிமோனா மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடர்கள் சுகோய்-30 போர் விமானங்கள் இடம் பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் குடும்பங்கள், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆயுதப் படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132691  

------

AD/TS/GK/KPG/SG


(Release ID: 2132793) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Marathi