விவசாயத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் தலைமையின் கீழ் ‘வளர்ச்சியடைந்த விவசாய சங்கல்ப் இயக்க’ ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன
Posted On:
24 MAY 2025 9:22PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் தலைமையில், ‘வளர்ச்சியடைந்த விவசாய சங்கல்ப் இயக்கத்திற்கான’ ஏற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. இந்த நாடு தழுவிய பிரச்சாரம் மே 29 ஆம் தேதி ஒடிசாவின் பூரியின் புனித பூமியிலிருந்து முறையாகத் தொடங்கப்படும். இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து, இந்த மகத்தான முயற்சியைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, திரு சிவராஜ் சிங் சவுகான் புதுதில்லியில் நாடு முழுவதும் உள்ள விவசாய விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார்.
உரங்களின் சீரான பயன்பாடு, உள்ளூர் நிலைமைகளைப் புரிந்துகொள்வது, துல்லியமான ஆராய்ச்சி நுண்ணறிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் தரமான விதைகளை அணுகுவது ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் என்று அவர் வலியுறுத்தினார். ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், இந்தப் பிரச்சாரம் விஞ்ஞானிகள், துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை இணைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும் என்றும், இது நீண்ட காலமாக மறைந்திருந்த ஒரு ஒருங்கிணைப்பு என்றும் எடுத்துரைத்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் வேளாண் ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கான நிதி பற்றாக்குறை இருக்காது என்று உறுதியளித்தார். வளர்ச்சியடைந்த விவசாய சங்கல்ப் இயக்கத்தை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சி என்று விவரித்த அவர், அதன் விளைவுகள் வரவிருக்கும் காரீஃப் பருவத்திலேயே மகசூலை அதிகரிக்கும் மற்றும் செலவுகள் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2131023
****
(Release ID: 2131023)
SM/BK/SG
(Release ID: 2131137)