வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிமென்ட் மற்றும் கட்டுமானத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கவும் சிமென்ட் சுற்றுச்சூழல் அமைப்பில் பசுமை தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்தும் நோக்கிலும் "செம்ஹேக் ஃபார் கிரீன் இன்ஃப்ரா" ஹேக்கத்தான் தொடங்கப்பட்டது
Posted On:
22 MAY 2025 2:24PM by PIB Chennai
"செம்ஹேக் ஃபார் கிரீன் இன்ஃப்ரா" என்ற தலைப்பில் முதல் முறையாக தேசிய அளவிலான ஹேக்கத்தான் 2025 மே 20 அன்று பல்லாப்கரில் உள்ள தேசிய சிமென்ட் மற்றும் கட்டிடப் பொருட்கள் கவுன்சிலில் (என்சிபி) வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் டிபிஐஐடி இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய திரு சஞ்சீவ், என்சிபி இன்குபேஷன் மையம் தனது முதலாம் ஆண்டை நிறைவு செய்ததற்காக வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிமென்ட் மற்றும் கட்டுமானத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும் முயற்சியைப் பாராட்டினார். இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களை இந்த முயற்சியில் பங்கேற்க அவர் அழைத்தார். மேலும் ஹேக்கத்தான் நம்பிக்கைக்குரிய புத்தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
என்சிபி இன்குபேஷன் சென்டர் ஏற்பாடு செய்துள்ள இந்த ஹேக்கத்தான், சிமென்ட், கட்டுமானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் அடிப்படை கண்டுபிடிப்புகளின் தொழில்முனைவு மற்றும் வணிகமயமாக்கலை ஆதரிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என்சிபி இன்குபேஷன் சென்டர் பொது மேலாளர் மற்றும் பொறுப்பாளர் டாக்டர் கபில் குக்ரேஜா, இரண்டு விதமான போட்டியின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். ஒன்று தொடக்க நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தனிநபர்களுக்கானது, மற்றொன்று மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கானது. சிமென்ட் துறையில் உள்ள நிதர்சனமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தியது. பங்கேற்பு இலவசம்.
ஹேக்கத்தான் கருப்பொருள்களில் பசுமை சிமென்ட், பசுமை செயல்முறை, பசுமை கான்கிரீட், கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பு, தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மற்றும் நிகர பூஜ்ஜிய இலக்குகளை அடைதல் ஆகியவை அடங்கும். ரூ.1 லட்சம் வரை ரொக்க வெகுமதிகள் மற்றும் என்சிபி இன்குபேஷன் சென்டரில், இன்குபேஷன் அல்லது வழிகாட்டுதல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பதிவுகள் 2025 மே 20 முதல் ஜூலை 20 வரை https://www.ncbindia.com/cemhack.php-ல் திறந்திருக்கும். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் டிபிஐஐடி-ன் கீழ் இயங்கும் என்சிபி, சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கான இந்தியாவின் உச்ச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும். மூலப்பொருட்கள் முதல் கட்டி முடிக்கப்படும் கட்டமைப்புகள் வரையிலான துறைகளில் நிபுணத்துவம் பெற்றது.
என்சிபி-ன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் எல் பி சிங், நீடித்த வளர்ச்சியை எட்டுவதில் ஹேக்கத்தானின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் ஐஐடி ரூர்க்கி மற்றும் ஜெகே சிமென்ட் நிறுவனத்துடன் டிஎஸ்டி நிதியுதவி பெற்ற சிசியு சோதனைப் படுக்கை திட்டம் உட்பட சமீபத்திய மைல்கற்களை எடுத்துரைத்தார். என்சிபி-ல் சிசியு-க்கான ஒரு சிறப்பு மையம் நிறுவப்படுவதை அவர் அறிவித்தார்.
இந்த நிகழ்வில் ஐஐடி ரூர்க்கியின் இயக்குநர் பேராசிரியர் கே கே பந்த், என்சிபியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீ சிமென்ட் நிறுவனத் தலைவர் திரு நீரஜ் அகோரி, என்சிபி-யின் தலைமை இயக்குநர் டாக்டர் எல் பி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் என்சிபி விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
-----
(Release ID 2130467)
SM/KPG/KR
(Release ID: 2130486)