தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
‘உள்நாட்டில் குத்தகை மின்சுற்றுகளுக்கான கட்டண மறுஆய்வு’ குறித்த இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்கூட்டிய ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
Posted On:
21 MAY 2025 5:45PM by PIB Chennai
2025-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி “உள்நாட்டு குத்தகைக்கு விடப்பட்ட மின்சுற்றுகளுக்கான கட்டண மறுஆய்வு” குறித்த முன்கூட்டிய ஆலோசனை தொடர்பான கட்டுரையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களது உள்ளீடுகள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 - ம் ஆண்டு மே 19 - ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கூறிய முன் ஆலோசனைக் கட்டுரையில் உள்ளீடுகள் கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு பங்குதாரரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களது கருத்துக்களைத் சமர்ப்பிக்கும் வகையில் கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டு, இதற்கான கடைசி தேதியை ஒரு வாரம் வரை, அதாவது 2025 - ம் ஆண்டு மே 26 - ம் தேதி வரை நீட்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
கருத்துகளை advfea2@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னணு வடிவத்தில் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெளிவுபடுத்தலுக்கும் அல்லது கூடுதல் தகவல்களுக்கும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆலோசகர் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) திரு. விஜய் குமார் அவர்களை +91-11-20907773 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130304
----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2130345)