புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையானது, 'சிறப்பான செயல்பாடுகளுக்கான' மதிப்பீட்டை பொதுத் துறை நிறுவனங்கள் துறையிடமிருந்து பெற்றுள்ளதன் மூலம், தலைசிறந்த 4 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,மின்சாரம் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது
Posted On:
21 MAY 2025 3:57PM by PIB Chennai
நாட்டின் மிகப்பெரிய தூய மற்றும் பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி வரும் வங்கிசாரா நிதி நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனமானது 2023-24 - ம் நிதியாண்டில் கையெழுத்திட்டுள்ள வருடாந்திர செயல்திறன் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, பொதுத் துறை நிறுவனங்கள் துறையால் சிறப்பான செயல்திறன் கொண்ட நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
84 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கான மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2023-24-ம் நிதியாண்டிற்கான பொதுத்துறை நிறுவனங்கள் துறை வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நாட்டின் முதல் 4 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் தனது சிறந்த செயல்பாடுகளுக்காக 98-க்கும் கூடுதலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை 2023-24-ம் நிதியாண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 'சிறந்த செயல்பாடுகளுக்கான' மதிப்பீட்டை 2025-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அன்று பெற்றது. 84 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பட்டியலையும் பொது நிறுவனங்கள் துறை வெளியிட்டுள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு. பிரதீப் குமார் தாஸ், "வங்கி சாரா நிதி மற்றும் மின்சாரத் துறையில் சிறப்பாகச் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டதற்கும், 98 - க்கும் கூடுதலான மதிப்பெண்களுடன் நாட்டின் முதல் 4 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதிலும் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக கூறினார். நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான தங்கள் குழுவின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் உத்திசார் தொலைநோக்குப் பார்வையை இந்த சாதனை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த மதிப்பீடு பசுமை எரிசக்தி உற்பத்திக்கான நிதியுதவி அளிப்பதில் அதன் தலைமைத்துவத்தையும், புதுமையான, நிலையான எரிசக்தி தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் நாட்டைக் கட்டமைப்பதற்கான தங்களது உறுதிப்பாட்டையும் மீண்டும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் கூறினார்".
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனக் குழுவினருக்கு அதன் தலைவரும், மேலாண் இயக்குனருமான திரு பிரதீப் குமார் தாஸ் வாழ்த்து தெரிவித்ததுடன், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்டோருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130231
******
TS/SV/KPG/KR
(Release ID: 2130288)