புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் திறன்களை எடுத்துக்காட்டும் வகையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2025-ல் பங்கேற்றது
Posted On:
20 MAY 2025 5:42PM by PIB Chennai
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் இந்தியாவின் உத்தி சார்ந்த தொலைநோக்குப் பார்வை மற்றும் திறன்களை எடுத்துக்காட்டும் வகையில், மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி இன்று ரோட்டர்டாமில் நடைபெற்ற உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 202-இல் உரையாற்றினார்.
இந்தத் துறையில் உலகளாவிய தலைமைத்துவமாக மாறுவதற்கு பசுமை ஹைட்ரஜனில் இந்தியாவின் மாற்றத்தக்க திறனை செயலாளர் அப்போது எடுத்துரைத்தார். இந்த லட்சியம் பெரும்பாலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவின் வலிமையைச் சார்ந்துள்ளது என்று கூறினார்.
இந்தியா ஏற்கனவே 223 ஜிகா வாட்டிற்க்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவியுள்ளது - இதில் 108 ஜிகா வாட் சூரிய சக்தியிலிருந்தும் 51 ஜிகா வாட் காற்றிலிருந்தும் கிடைக்கிறது. இது உலகளவில் விரைவாக வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில் இந்தியாவை இடம் பெற செய்துள்ளது என்று செயலாளர் எடுத்துரைத்தார். 2047-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரத்தை அடைவதும், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல, தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் 2023-ம் ஆண்டு அரசால் தொடங்கப்பட்டது.
***
(Release ID: 2129952)
SM/IR/RR/KR/DL
(Release ID: 2130022)