அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மும்பை மாநாட்டில் கடல்சார் புத்தொழில் நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகளை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்
Posted On:
20 MAY 2025 5:48PM by PIB Chennai
2025-ம் ஆண்டு சிஎஸ்ஐஆர் புத்தொழில் நிறுவன மாநாட்டில் உரையாற்றிய மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை, பிரதமர் அலுவலகம், அணுசக்தி துறை, விண்வெளி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கடலோர மாநிலங்களில் கடல்சார் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் விரிவடைந்து வரும் பொருளாதாரத்தில் மதிப்பு கூட்டலுக்கு பங்களிக்கும் குறிப்பிடத்தக்க ஆற்றலுடன் இது ஒப்பீட்டளவில் பயன்படுத்தப்படாத துறையாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாறுவதற்கான பயணம், கண்டறியப்படாத துறைகளில் ஈடுபடுவதை கணிசமாக நம்பியிருக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். மும்பை, அதன் உத்தி சார்ந்த கடற்கரை இருப்பிடத்துடன், கடல்சார் பொருளாதாரத்தின் மகத்தான ஆற்றலை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு சிறந்த இடமாகும் என்று அவர் கூறினார். குறிப்பாக இந்தியா 7,500 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரைகளைக் கொண்டுள்ளது மற்றும் பல முக்கிய மாநிலங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
பல்வேறு பிராந்தியங்களில் புத்தொழில் மாநாடுகளை ஏற்பாடு செய்வதன் பின்னணியில் உள்ள பரந்த தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வளர்ந்து வரும் திறமை மற்றும் தொழில்முனைவோர் யோசனைகளுடன் இணைவதே இதன் நோக்கம் என்றார். தற்போதைய புத்தொழில் நிறுவனங்களில் 49% இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து உருவாகி வருகின்றன என்பது ஊக்கமளிக்கக் கூடிய செயல்பாடு என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129958
***
SM/IR/RR/KR/DL
(Release ID: 2130018)