உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு 2025-ல் பீகார் உலகளாவிய வேளாண்-உணவு ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது
Posted On:
19 MAY 2025 5:35PM by PIB Chennai
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் மற்றும் பீகார் அரசு ஆகியவற்றுடன் இணைந்து உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், மே 19 மற்றும் 20, 2025 ஆகிய இரு நாட்கள் பீகாரின் பாட்னாவில் சர்வதேச வாங்குபவர்- விற்பனையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வு உணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து வர்த்தகத்தை மேம்படுத்தவும், ஏற்றுமதிகளை வலுப்படுத்தவும், பீகாரின் விவசாய-உணவுத் தொழில் வாய்ப்புகளை வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க அமர்வில் மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான், பீகார் துணை முதல்வர் திரு விஜய் குமார் சின்ஹா, பீகார் தொழில்துறை அமைச்சர் திரு நிதிஷ் மிஸ்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஆறு உலகளாவிய சில்லறை விற்பனையாளர்கள் உட்பட 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 70 சர்வதேச வாங்குபவர்கள், 50 உள்நாட்டு மற்றும் 20 நிறுவன வாங்குபவர்கள் பங்கேற்றனர்.
இந்தக்கூட்டம், பீகாரில் இருந்து அரிசி, மசாலா பொருட்கள், மக்கானா மற்றும் பழங்களை பெரிய அளவில் கொள்முதல் செய்வதை ஆராய்ந்து வரும் லுலு குழுமம் (யு.ஏ.இ.), சர்தாஜ் (ஜப்பான்), டாட்டர் & சன்ஸ், (யு.ஏ.இ.) மற்றும் குளோபல் ஃபுட்ஸ் ட்ரேடிங்(ஜெர்மனி) போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தங்களின் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தின. Royal Golden Trading ராயல் கோல்டன் ட்ரேடிங் (யு.ஏ.இ.) மற்றும் யுவிஆர் நேச்சுரல் ஃபுட்ஸ்(இந்தியா) போன்ற நிறுவனங்களும் உறுதியான ஆதாரத் திட்டங்களை அறிவித்துள்ளன,
தொடக்க உரையை மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் தொடக்க உரையாற்றினார். அவர் அரசின் "வளர்ச்சியடைந்த இந்தியா @2047" என்ற தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தினார். "இந்த சர்வதேச வாங்குபவர்- விற்பனையாளர் சந்திப்பு வெறும் வர்த்தக நிகழ்வு மட்டுமல்ல, இது கிராமப்புற செழிப்புக்கான ஒரு திருப்புமுனையாகும்" என்று அவர் மேலும் கூறினார். "பீகாரின் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், வேலை உருவாக்குபவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் கற்பனை செய்கிறோம். ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அரசு முழுமையாக வசதிகளை வழங்குவதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
பீகார் சர்வதேச வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு 2025, இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி நிலப்பரப்பில் பீகாரின் நிலையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது.. இந்த நிகழ்வு கூட்டாண்மைகளை ஊக்குவித்து, முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129659
***
TS/PKV/RR/DL
(Release ID: 2129701)