உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மெஹ்சானாவில் செவிலியர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தார்
ஒவ்வொரு ஏழைக்கும் தரமான சுகாதார சேவைகளை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது : திரு அமித் ஷா
Posted On:
18 MAY 2025 6:38PM by PIB Chennai
குஜராத்தின் மெஹ்சானாவில் கே.கே. படேல் - ஸ்ரீமதி மதுபென் கே. படேல் நர்சிங் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடிடங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (18.05.2025) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, இந்த நர்சிங் கல்லூரி கடந்த 65 ஆண்டுகளாக செவிலியர் கல்வியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது என்றார். விரிவுரை அறை, ஆய்வகம், நூலகம், அலுவலகம் போன்ற வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம், இப்பகுதி இளைஞர்களுக்கு எளிதான செவிலியர் கல்வியை வழங்கும் என்று அவர் கூறினார்.
நாட்டில் முன்னர் பலவீனமாக இருந்த சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக திரு அமித் ஷா கூறினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடிமகனிடமும் இப்போது ஆயுஷ்மான் அட்டை உள்ளது எனவும் இதன் மூலம் அவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, 2014 முதல் சுகாதாரத் துறையில் ஒரு தீவிர மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். 2014 க்கு முன்பு, நாட்டின் சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூபாய் 37 ஆயிரம் கோடியாக இருந்தது எனவும் 2025-26 ஆம் ஆண்டில் இது ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 2014 ஆம் ஆண்டில், நாட்டில் ஏழு எய்ம்ஸ்-கள் மட்டுமே இருந்தன எனவும் இப்போது 23 எய்ம்ஸ்-கள் உள்ளன என்றும் அவர் கூறினார். 2014-ம் ஆண்டில், 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன எனவும் அவை இப்போது 780 ஆக அதிகரித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார். பிரதமரின் மக்கள் மருந்தக திட்டத்தால் கடந்த 10 ஆண்டுகளில் ரூபாய் 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள மருந்துகள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன என திரு அமித் ஷா கூறினார்.
****
(Release ID: 2129466)
TS/PLM/SG
(Release ID: 2129497)