சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரப்படுத்தப்பட்ட எதிர்வினை செயல் திட்டம் தொடர்பான சிஏக்யூஎம் துணைக் குழு, தேசிய தலைநகர் முழுவதும் நிலை -1 கட்டுப்பாடுகளை உடனடியாக ரத்து செய்துள்ளது

Posted On: 18 MAY 2025 6:18PM by PIB Chennai

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வழங்கிய தினசரி காற்றுத் தரக் குறியீட்டின் படி, தில்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) இன்று 179 ஆக இருந்தது. தில்லியின் தினசரி சராசரி குறியீட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய தலைநகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM-சிஏக்யுஎம்) தரநிலைப்படுத்தப்பட்ட எதிர்வினை செயல் திட்ட (ஜிஆர்ஏபி - GRAP) துணைக் குழு இன்று கூடி, பிராந்தியத்தில் தற்போதைய காற்றின் தர சூழ்நிலையை மதிப்பாய்வு செய்தது.

இதில் முழு தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (NCR) நடைமுறையில் உள்ள நிலை-I-ன் கீழ் நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான முடிவை எடுத்தது. அதன்படி நடப்பிலுள்ள அட்டவணையின் நிலை-I உடனடியாக ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் நிறுவனங்களும் காற்றின் தரத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்தத் துணைக் குழு தொடர்ந்து காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து, அவ்வப்போது தேவைக்கேற்ப முடிவுகளை எடுக்கும்.

*****

 

(Release ID: 2129459)

TS/PLM/SG

 

 


(Release ID: 2129490)
Read this release in: English , Urdu , Hindi