இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஜிஎஸ்டி-யின் 8 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளிங் நிகழ்வு - மும்பையில் சுனில் ஷெட்டி பங்கேற்பு
Posted On:
18 MAY 2025 5:46PM by PIB Chennai
சிபிஐசி-ஜிஎஸ்டி-யுடன் இணைந்து உடல்திறன் இந்தியா இயக்கம் நடத்திய நாடு தழுவிய "ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்வில் மும்பையில் நடிகரும் உடற்பயிற்சி ஆர்வலருமான சுனில் ஷெட்டி பங்கேற்றார். ஆரோக்கியம் மிகவும் எளிமையானது எனவும், சைக்கிள் ஓட்டுவதும், உடற்பயிற்சியும் ஒரு நாள் விஷயமாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு ஜிஎஸ்டியின் எட்டு ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில் உடற்பயிற்சிக்கான உறுதிப்பாட்டைக் கொண்டாடியது. சிபிஐசி-ஜிஎஸ்டி மையங்களில் ஆயிரக்கணக்கானவர்களை இது ஒன்றிணைத்தது. திருவனந்தபுரத்தில், இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
*******
(Release ID: 2129454)
TS/PLM/SG
(Release ID: 2129470)