பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நிர்வாகப் பயணத்தில் மாற்றம் பற்றி டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்

Posted On: 16 MAY 2025 5:24PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் மிசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக்கழகத்தில் இந்திய குடிமைப்பணி பயிற்சியாளர்கள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடையே உரையாற்றிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிபொறுப்பு), பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நிர்வாகப் பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி எடுத்துரைத்தார்.

2014-ம் ஆண்டுக்கு முன் நிர்வாக பணிகளும், மனநிலைகளும் காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சங்களாக தொடர்ந்தன. ஆனால் பிரதமர் மோடி தலைமையின் கீழ் சேவை வழங்குதல், ஜனநாயகமயம் ஆக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு வருவாய் வசூலிக்கும் பொறுப்பு கலெக்டர் என்பவரின் பங்காக இருந்தது.  இந்தப்பதவி மக்கள் நல அரசின் காலத்தில் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் என்பதாக மாற்றப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.

பொது மக்களுக்கு சேவை வழங்குவதில் வெளிப்படை தன்மை, எளிதில் அணுகுதல், திறமை ஆகியவற்றை விரிவுபடுத்த பல முக்கியமான சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ் வழங்குவதற்கான இயக்கம் ஓய்வூதிய விநியோகத்தில் புரட்சிகர மாற்றத்தை செய்துள்ளது என்றும் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின்  அடையாளத்தை சரிபார்க்க முக அங்கீகார தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் வங்கி கிளைகளுக்கு அவர்கள் நேரடியாக செல்லவேண்டிய தேவை நீக்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார். நிர்வாக நடைமுறைகளை எளிதாக்க ஒற்றை ஓய்வூதிய படிவம் அறிமுகம் செய்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அனைவரையும் உட்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பணி நியமனத் தேர்வுகள் தற்போது 13 மாநில மொழிகளில் நடத்தப்படுகின்றன என்றும், இதனை அரசியல் சட்டத்தில் அங்கீகரித்து 22-வது அட்டவணையில் உள்ள அனைத்து 22 மொழிகளுக்கும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அனைவருக்கும் சமவாய்ப்பு அளிப்பதை உறுதிசெய்ய  பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு தகுதி அடிப்படையிலான தெரிவுகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், இளைஞர்களிடையே விருப்பங்களை அதிகரிக்கச் செய்யவும், வேலைவாய்ப்பு முகாம்கள் தொடங்கப்பட்டன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

2047-ம் ஆண்டு நாடு தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை வளர்ச்சியடைந்த இந்தியாவாக கொண்டாடவுள்ள நிலையில், உங்களின் தலைமுறை வாழ்த்துப் பெற்ற தலைமுறையாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் இந்தியாவின் புகழை வடிவமைக்கவும், காணவும் அந்த சமயத்தில் நீங்கள் உங்களின் உச்சத்தில் இருப்பீர்கள் என்றார்.

முன்னதாக லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விக்கழக இயக்குநர் திரு ஸ்ரீராம் தரணி காந்தியின் வரவேற்புரை மற்றும் அறிக்கை அளித்தலுடன் இந்த அமர்வு தொடங்கியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129113

***

SM/SMB/AG/SG


(Release ID: 2129152)
Read this release in: Urdu , English , Hindi