அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குவாண்டம் தொழில்நுட்பத்தில் "தற்சார்பு இந்தியா": தரநிலைகள் மற்றும் உள்நாட்டு அணுகுமுறைகள் பற்றி விவாதம்
Posted On:
15 MAY 2025 2:14PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய அளவீட்டு நிறுவனமான சிஎஸ்ஐஆர்-தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை மே 6 அன்று ஒரு முக்கியமான "குவாண்டம் தொழில்நுட்பங்கள், அளவீடுகள் மற்றும் தரப்படுத்தலுக்கான உள்நாட்டு அணுகுமுறைகள் குறித்த கவனம் செலுத்தும் தொடர்பு கூட்டத்தை" நடத்தியது.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் குவாண்டம் தொழில்நுட்பத் துறையை ஆதரிப்பதற்காக உள்நாட்டு தரநிலைகள் மற்றும் அளவீட்டு திறன்களை வளர்ப்பதற்கான முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு பங்குதாரர்களின் குழுவை இந்தக் கூட்டம் கூட்டியது. கவனம் செலுத்தப்பட்ட கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எச்சிஎல்-லின் இணை நிறுவனர் மற்றும் தேசிய குவாண்டம் இயக்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் பேராசிரியர் அஜய் சௌத்ரி; சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் - மெட்ராஸ் (IIT-M) இயக்குனர் வி. காமகோடி; CSIR-NPL இயக்குனர் வேணு கோபால் அச்சந்தா; புது தில்லியில் உள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சிவகுமார் கல்யாணராமன் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இஸ்ரோ, டிஆர்டிஓ, டிஐஎஃப்ஆர் மும்பை, ஐஐடிகள்-மெட்ராஸ், டெல்லி, திருப்பதி, ஐஐஎஸ்இஆர்-புனே, பிஐஎஸ்-புது தில்லி, டிஓடி-புதுதில்லி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் சென்னை, சிஎஸ்ஐஆர்-என்பிஎல் மற்றும் ஐஐடி-எம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் குழுக்கள் கலந்து கொண்டனர்.
துல்லியமான அளவீடுகளின் வளர்ச்சி, வலுவான தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப இறையாண்மையை நாடுதல் ஆகியவை நம்பகமான குவாண்டம் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு அடிப்படையானவை என்பதை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர். தேசிய மற்றும் சர்வதேச தரப்படுத்தல் முயற்சிகளை இயக்குவதற்கும், வணிக வாய்ப்புகளை வளர்ப்பதற்கும், குவாண்டம் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாட்டை உறுதி செய்வதற்கும் உள்நாட்டு குவாண்டம் அணுகுமுறைகள், திறன்கள் மற்றும் முன்னேற்றங்கள் அவசியம் என்பது சிறப்பிக்கப்பட்டது. இந்தத் துறையில் குறிப்பிட்ட தரநிலைகளின் அவசியத்தை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்..
இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பங்களை சீராக ஏற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான நான்கு தூண்களின் முக்கியத்துவk; இந்த விவாதங்களின் மையக் கருப்பொருளாக இருந்தது:
பல முக்கிய உரைகள் மற்றும் தொழில்நுட்பப் பேச்சுக்களைத் தொடர்ந்து ஒரு சுவாரஸ்யமான குழு விவாதம் நடைபெற்றது. குழு விவாதத்தில், வலுவான மற்றும் தற்சார்பு) இந்தியாவிற்கான குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் தரநிலைகள், அத்துடன் அளவியல் ஆகியவற்றின் உள்நாட்டு வளர்ச்சியின் அவசியத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID: 2128824)
SM/PKV/RR/RJ
(Release ID: 2128837)