நிலக்கரி அமைச்சகம்
கோல் இந்தியாவின் தலசீமியா பால் சேவா திட்டம் ஒரு மைல்கல்; அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் கூட்டாண்மைகளை வலுப்படுத்த அமைச்சர் வலியுறுத்தினார்
Posted On:
08 MAY 2025 7:05PM by PIB Chennai
உலக தலசீமியா தினம் 2025 ஐ முன்னிட்டு, நிலக்கரி அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்), அதன் முதன்மை சிஎஸ்ஆர் முன்முயற்சியான தலசீமியா பால் சேவா திட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியை புது தில்லியில் உள்ள ஹோட்டல் அசோக்கில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கொண்டாடியது. தலசீமியா மற்றும் அப்பிளாஸ்டிக் அனீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளை ஆதரிக்கும் இந்தத் திட்டம், நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியாக உருவெடுத்துள்ளது.
நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார், நிலக்கரி அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு பி.எம்.பிரசாத், பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, இத்திட்டத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் தாக்கத்தைப் பாராட்டியதுடன், திட்டத்தின் கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான "ஒரு மாநிலம், ஒரு மருத்துவமனை" என்ற லட்சிய எதிர்கால இலக்கை அறிவித்தார். நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற குடும்பங்களுக்கு இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று விவரித்த அவர், கோல் இந்தியா லிமிடெட் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதற்காகவும், ஒரு முக்கியமான பொது சுகாதார சவாலை எதிர்கொள்வதில் இரக்கமுள்ள அணுகுமுறையை நிரூபித்ததற்காகவும் அதனைப் பாராட்டினார். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 700 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த குழந்தைகளில் பெரும்பாலோர் இப்போது ஆரோக்கியமான மற்றும் சாதாரண வாழ்க்கையை நடத்துகின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127782
***
RB/DL
(Release ID: 2127824)
Visitor Counter : 2