நித்தி ஆயோக்
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்ப தரவு மைய முதலீடுகளை விரைவுபடுத்துவது குறித்த மாநிலங்களுக்கான பயிலரங்கை நித்தி ஆயோக் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
08 MAY 2025 5:46PM by PIB Chennai
இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் முக்கிய பங்களிப்பை உணர்ந்து, நித்தி ஆயோக் தொழில்நுட்ப மையம், அனைத்து மாநிலங்களும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப தரவு மையங்களில் முதலீடுகளை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. 2025 - ம் ஆண்டு மே 8 - ம் தேதி இதற்கென மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் உயர்நிலை பயிலரங்கை நடத்தியது.
இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மையமாக நிலைநிறுத்துவதற்கான ஒரு உத்திசார்ந்த வரைபடத்தை வகுக்க, முக்கிய மாநில அரசுகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை இந்தப் பயிலரங்கம் ஒன்றிணைத்தது.
இந்தியாவின் டிஜிட்டல் மேம்பாட்டிற்கான லட்சியங்களுக்கும் அதன் தற்போதைய கணினித் திறன்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியை இந்த விவாதங்கள் எடுத்துக் காட்டின. உலக அளவிலான தரவுகளில் ஏறத்தாழ 20% அளவிற்கு இந்தியா உற்பத்தி செய்தாலும், உலகளாவிய தரவு மையத்திற்கான திறனில் இது 3% - மாக மட்டுமே உள்ளது. பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வருவதால், நம்பகமான, அளவிடக்கூடிய, நிலையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கான தேவை முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் அவசரத் தேவையாக உள்ளது.
நிலம், கட்டுமானத் துறை போன்ற துறைகளில் மையப்படுத்தப்பட்ட மாதிரிகளைக் கடந்து, தூய்மையான எரிசக்தி, உயர் செயல்திறன் கொண்ட கணினி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கொள்கை சூழல்களை அணுகுவதில் வலுவான ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு மாநிலங்களை இந்தப் பயிலரங்கு வலியுறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127731
*****
(Release ID: 2127731)
SM/SV/RJ/DL
(Release ID: 2127779)