கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தேசிய நீர்வழிகளில் சரக்கு வளர்ச்சியை அதிகரிக்க உலகளாவிய நிறுவனமான ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியாவுடன் ஐடபிள்யூஏஐ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
प्रविष्टि तिथि:
06 MAY 2025 8:05PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (ஐடபிள்யூஏஐ), ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் என்பது ஜெர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச சரக்குப் போக்குவரத்து சேவை வழங்குநராகும். இது உலகளவில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 8.2 பில்லியன் யூரோ ஆண்டு வருவாயுடன் செயல்படுகிறது. புதுதில்லியில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன், இந்திய தேசிய நீர் ஆணையத்தின் தலைவர் திரு. விஜயகுமார், ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியாவின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 100 சரக்குக் கப்பல்களையும், புஷர் இழுவைப் படகுகளையும் படிப்படியாக என்டபிள்யூ-1, என்டபிள்யூ-2, என்டபிள்யூ-16 மற்றும் இந்தோ-வங்கதேச நெறிமுறை (ஐபிபி) வழித்தடங்களில் நிலைநிறுத்தும்.
ஐடபிள்யூஏஐ மற்றும் ரேனஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், நாட்டில் நெகிழ் தன்மைமிக்க பன்முக சரக்குப் போக்குவரத்து சூழலை உருவாக்குவதற்கான ஒரு துணிச்சலான நடவடிக்கை என்று மத்திய அமைச்சர் திரு சோனோவால் கூறினார். ஐடபிள்யூடி துறையில் தனியார் பங்களிப்புக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் என்று குறிப்பிட்ட அவர், இந்தத் துறையில் புதுமை மற்றும் மூலதன முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளுக்கு இந்த நடவடிக்கை வித்திடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த நடவடிக்கை நீர்வழிகளின் உள்கட்டமைப்பை திறம்பட பயன்படுத்துவதையும் விரிவுபடுத்துவதையும் உறுதி செய்யும், இதன் மூலம் செயல்பாட்டு செலவுகள் குறையும், ஐடபிள்யூடி துறையை அதிக போட்டித்தன்மை மற்றும் சந்தை தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடியதாக மாற்றும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127332
***
RB/DL
(रिलीज़ आईडी: 2127355)
आगंतुक पटल : 34