அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை நாகாலாந்து முதல்வர் புதுதில்லியில் சந்தித்தார்
Posted On:
06 MAY 2025 6:35PM by PIB Chennai
நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியூ ரியோ, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
நாகாலாந்து துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு. ஒய். பேட்டன், தோட்டக்கலை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி சல்ஹவுட்டுவோனுவோ குரூஸ் ஆகியோரும் இந்த சந்திப்பின் பொது உடன் இருந்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி வடகிழக்கிற்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதை வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், வடகிழக்கு பிராந்தியத்தில் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் முன்னுரிமையை அடிக்கோடிட்டுக் காட்டினார். மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பாதிகாப்பு மையங்களை ஊக்குவித்தல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறையின் திட்டங்கள் மூலம் இளைஞர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தல் ஆகியவை விவாதங்களில் அடங்கும்.
விண்வெளித் துறை மற்றும் அணுசக்தித் துறையின் கீழ் தொலைதூர மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் மேம்பாட்டு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சர் முதலமைச்சருக்கு விளக்கினார். பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, வடகிழக்கில் வழக்கமான பயிற்சிகள், இடைக்கால தொழில் தலையீடுகள் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு டிஜிட்டல் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துவதன் மூலம் நிர்வாகத் தரத்தை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது என்றார், அவர்.
வடகிழக்குப் பகுதியில் இந்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்த நாகாலாந்து முதலமைச்சர், தேசிய இயக்கங்களில் இன்னும் தீவிரமாக இணைந்து செயல்பட மாநிலத்தின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127313
***
RB/DL
(Release ID: 2127344)