நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
மொபைல் மற்றும் மின்னணுத் துறையில் பழுதுபார்க்கும் தன்மை குறியீட்டு எண் கட்டமைப்பிற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
Posted On:
03 MAY 2025 11:03AM by PIB Chennai
மொபைல் மற்றும் மின்னணுத் துறையில் பழுதுபார்க்கும் தன்மை குறியீட்டு எண் கட்டமைப்பிற்கான குழு, மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் செயலாளர் திருமதி நிதி கரேவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
புதுமை மற்றும் வணிகத்தை எளிதாக்குவது தொடர்பாக தொழில்துறைக்கு எந்தத் தடையும் ஏற்படாமல், சிறந்த உலகளாவிய நடைமுறைகளுடன் இணக்கமாக குழுவின் பரிந்துரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அசல் உபகரண உற்பத்தியாளர்கள், கூடுதல் இணக்கச் சுமை இல்லாமல் கட்டமைப்பில் வழங்கப்பட்ட தரநிலை மதிப்பெண் அளவுகோல்களின் அடிப்படையில் பழுதுபார்க்கும் தன்மை குறியீட்டு எண்ணை சுயமாக அறிவிக்க வேண்டும்.
மேலும், பழுதுபார்க்கும் தன்மை குறியீட்டு எண்ணை விற்பனை/வாங்கும் இடத்தில், மின் வணிக தளங்களில் மற்றும் கியூஆர் குறியீடு வடிவில் தொகுக்கப்பட்ட தயாரிப்புகளில் எடுத்துக் காட்ட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது, இதனால் நுகர்வோர் தகவலறிந்த தேர்வுகளை மேற்கொள்ள முடியும்.
பழுதுபார்க்கும் தன்மை குறியீட்டு எண் ஒருசூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு நுகர்வோர் 'வீணான நுகர்வு'க்கு பதிலாக தங்கள் தயாரிப்புகளை 'கவனத்துடன் பயன்படுத்துதல்' என்ற நெறிமுறையுடன் ஒத்துப்போகும் விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். நுகர்வோருக்கு எளிதான மற்றும் தொந்தரவு இல்லாத பழுதுபார்க்கும் விருப்பங்களை வழங்குவதன் மூலம், நுகர்வோர் விவகாரத் துறையானது சுயசார்பு, நிலையான மற்றும் நுகர்வோருக்கு ஏற்ற பொருளாதாரத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் பெறப்பட்ட குறைகளின் பகுப்பாய்வு, தங்கள் மொபைல் போன் மற்றும் கைக்கணினிகளுக்கு பழுதுபார்ப்பு தேடும் போது ஏராளமான நுகர்வோர் சிக்கல்களை எதிர்கொள்வதாக எடுத்துக் காட்டுகிறது. மொபைல்கள் மற்றும் கைக்கணினிகள் தயாரிப்பு பிரிவில் 2022-2023 ஆம் ஆண்டில் 19,057 புகார்கள் பெறப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டில் 21,020 ஆகவும், 2024-2025 ஆம் ஆண்டில் 22,864 ஆகவும் புகார்கள் அதிகரித்துள்ளன, இது பழுதுபார்க்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும், நுகர்வோருக்கு பழுதுபார்ப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை தொடர்பான தகவல்களில் அதிக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்குமான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
செப்டம்பரில், நுகர்வோர் விவகாரத் துறை , பழுதுபார்க்கும் தன்மை குறியீட்டு எண் கட்டமைப்பை உருவாக்குவதற்காக கூடுதல் செயலாளர் திரு பாரத் கேரா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தது.
இந்தக் குழுவில், ஆப்பிள், சாம்சங், கூகிள், விவோ, எச்எம்டி மொபைல்ஸ், டெல், ஹெச்பி போன்ற நிறுவனங்களுடன் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இருந்தனர். மேலும், முக்கிய தொழில் சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் டோகா, மெய்ட்டி, எம்எஸ்எம்இ ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள்,• என்டிஎச் மற்றும் பிஐஎஸ் போன்ற அறிவியல் அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126409
****
TS/PKV/RJ
(Release ID: 2126432)
Visitor Counter : 37