பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி பொறுப்பேற்றார்.
प्रविष्टि तिथि:
02 MAY 2025 5:17PM by PIB Chennai
ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் விஎம், இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக 2025, மே 02 அன்று பொறுப்பேற்றார்.
ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து, கடக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். 1985 ஜூன் மாதத்தில் குடியரசுத்தலைவரின் தங்கப் பதக்கத்துடன் தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றார். 1986, ஜூன் 07 அன்று இந்திய விமானப்படையில் போர் விமான விமானியாக நியமிக்கப்பட்டார். பல்வேறு வகையான விமானங்களில் 3600 மணி நேரத்திற்கும் அதிகமான விமானப் பயிற்சி அனுபவத்தை ஏர் மார்ஷல் பெற்றுள்ளார். தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் மற்றும் சோதனை விமானி தவிர, ஏர் மார்ஷல், அமெரிக்காவின் ஏர் கமாண்ட் மற்றும் ஸ்டாஃப் கல்லூரியில் இவர் பட்டம் பெற்றுள்ளார்.
விமானப்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன், தென்மேற்கு விமானப்படை காமாண்டில் கமாண்டிங்-இன்-சீஃப் ஆக இருந்தார். இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 2025-ம் ஆண்டு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் (பிவிஎஸ்எம்), 2022-ம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (ஏவிஎஸ்எம்) 2008-ம் ஆண்டு வாயு சேனா பதக்கம் (விஎம்) ஆகிய குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன.
இவர் சைட்டாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்ற திருமதி ரிச்சா திவாரியை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126201
******
SM/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2126262)
आगंतुक पटल : 39