சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கழிவுகளை அகற்றி மறுசுழற்சி பணி மேற்கொள்பவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை ஏற்படுத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஐநா வளர்ச்சித் திட்டத்துடன் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 01 MAY 2025 5:13PM by PIB Chennai

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஐநா வளர்ச்சி திட்டத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிலாளர்கள் நலனில் ஒரு முக்கிய நடவடிக்கையை அமைச்சகம் எடுத்துள்ளது. இது கழிவு சேகரிப்பு, மீட்பு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றில் அந்த தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரித்து வலுப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் நிலையான பணிச்சூழலுடன் நிதி மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட அணுகலை இந்த முயற்சி அவர்களுக்கு வழங்கும்.

இந்தியாவில் உள்ள ஐநா வளர்ச்சித் திட்டத்தின் பிரதிநிதி டாக்டர் ஏஞ்சலா லூசிகி மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு அமித் யாதவ் இடையே இந்த ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

நமாஸ்தே திட்டத்தின் கீழ் பல்வேறு மாநிலங்களில் மாநில திட்ட மேலாண்மை அலகுகளை நிறுவுவதற்கு முக்கியமான நிதி ஆதரவை வழங்க ஐநா வளர்ச்சித் திட்டம் முன்வந்துள்ளது. திட்டத்தின் நோக்கங்களை மிகவும் பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதை இது உறுதி செய்யும்.

2024-ம் நிதியாண்டு முதல் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை எனப்படும் நமாஸ்தே திட்டத்தின் கீழ் கழிவுகளை எடுப்பவர்கள் இதில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 2,50,000 கழிவுகளை எடுப்பவர்களை கணக்கெடுத்து அவர்களை, சேர்த்து நலத்திட்டங்களை செயல்படுத்தும் நமாஸ்தே திட்டம் சமூக நீதி அமைச்சகத்தால்  செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, பல மாநிலங்களில் 5,000 க்கும் மேற்பட்ட கழிவு எடுப்பவர்களின் விவரக்குறிப்புகள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர், இது இந்த தொழிலாளர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

*****

(Release ID: 2125807)

SM/PLM/SG/DL


(Release ID: 2125941) Visitor Counter : 8
Read this release in: English , Urdu , Hindi