நிலக்கரி அமைச்சகம்
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் கடந்த ஆண்டு அதே மாதத்தை விட 3.63 % அதிகரிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2025 4:59PM by PIB Chennai
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 2025 ஏப்ரல் மாதத்தில் படிப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நிலக்கரி அனுப்புவதை ஒழுங்குபடுத்துவதற்கும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குமான நிலக்கரி அமைச்சகத்தின் இடைவிடாத முயற்சிகளை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஏப்ரல் 2025 இல் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 81.57 மெட்ரிக் டன்னை எட்டியது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 78.71 மெட்ரிக் டன்னை விட அதிகமாகும்.
ஏப்ரல் 2025 இல் இந்தியாவின் மொத்த நிலக்கரி அனுப்புதல் 86.64 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. இது ஏப்ரல் 2024 இல் பதிவு செய்யப்பட்ட 85.11 மெட்ரிக் டன்னோடு ஒப்பிட நிலையான அதிகரிப்பைக் காட்டுகிறது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் இந்தியாவின் முன்னேற்றத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
30.04.2025 நிலவரப்படி, நிலக்கரி நிறுவனங்கள் வைத்திருக்கும் நிலக்கரி இருப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து, 2025-26 நிதியாண்டில் 125.76 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 102.41 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது நிலக்கரித் துறையின் வலுவான செயல்திறனைக் காட்டுகிறது.
***
(Release ID: 2125797)
TS/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2125888)
வருகையாளர் எண்ணிக்கை : 39