பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டல தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார் பணி ஓய்வு

Posted On: 01 MAY 2025 3:27PM by PIB Chennai

லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார், இந்திய ராணுவத்தில் நான்கு தசாப்த பணியை நிறைவு செய்துள்ளார். 2025 ஏப்ரல் 30 அன்று இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டல தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். விடைபெறும் நிகழ்வில் , பணியின்போது உயிர்த்  தியாகம்புரிந்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

பிஜாப்பூரின் சைனிக் பள்ளி மற்றும் என்.டி.ஏ, கடக்வாஸ்லாவின் முன்னாள் மாணவரான அவர்,  1985 ஜூன் 8 அன்று 1 அசாம் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு / கிளர்ச்சி தடுப்பு நடவடிக்கைகளில் அவருக்கு செறிவான மற்றும் பல்துறை அனுபவம் உள்ளது. அவரது உயர் நிலை பணி நியமனங்கள் அனைத்தும் ஜம்மு காஷ்மீரில் இருந்தன. இதில்  ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப் பிரிவுகாலாட்படை பிரிவு உள்ளிட்டவை  அடங்கும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடக்கு மண்டலத்தின் கமாண்டர் இன் சீப்  ஆக நியமிக்கப்பட்ட. அவர்தனது பதவிக் காலத்தில்ஜம்மு காஷ்மீரில்  பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைத்ததைத் தவிர, வடக்கு மற்றும் மேற்கு பிராந்திய எல்லைகளில் நிலையான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் வழிகாட்டுதல் மற்றும் செயல்பாட்டு மேற்பார்வையை வழங்கினார். எல்லைகள் மற்றும் உள்நாட்டில் ஒரு சீரான செயல்பாட்டு சூழ்நிலையை அவர் உறுதி செய்தார். அவரது தலைமையின் கீழ், மாறிவரும் செயல்பாட்டு இயக்கவியலுடன் சீரமைக்கவும், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களுக்கு பணியாளர்களைத் தயார்படுத்தவும் தேவையான பயிற்சி உருவாக்கப்பட்டது.

தமது பிரியாவிடை உரையில், அனைத்து அணிகளையும் அவர்களின் தன்னலமற்ற சேவைக்காக அவர்  பாராட்டினார். மேலும் இந்திய ராணுவத்தின் சிறந்த மரபுகளில் தங்கள் சிறந்த பணிகளைத் தொடருமாறு அவர்களை அறிவுறுத்தினார்.

***

(Release ID: 2125754)

TS/PKV/RJ


(Release ID: 2125824) Visitor Counter : 11
Read this release in: English , Urdu , Hindi