மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மும்பையில் நடைபெற்ற கடலோர மாநிலங்களின் மீன்பிடி மாநாடு 2025-ல் மீன்வளத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, நீடித்த நடைமுறைகள் குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அழைப்பு விடுத்தார்
Posted On:
28 APR 2025 6:38PM by PIB Chennai
மும்பையில் இன்று நடைபெற்ற கடலோர மாநிலங்களின் மீன்வள மாநாட்டில் ரூ.255 கோடி மதிப்பிலான முக்கிய மீன்வளத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மண்டல மீன்வளக் கவுன்சில் உருவாக்கம், நீலப்புரட்சி, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்ற திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், இந்தியாவின் பரந்த கடல் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
கடலோர மாநிலங்களின் மீன்வள மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் மற்றும் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா, குஜராத், கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தனது உரையில், லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஏற்றுமதியில் மதிப்புக் கூட்டுதலை அதிகரித்தல், தீங்கு விளைவிக்கும் மீன்பிடி நடைமுறைகளை ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில் மீன்வளத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், நீலப் புரட்சி மற்றும் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம் ஆகியவற்றின் கீழ் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், உலகளவில் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா மாற வழிவகுத்தது என்று கூறினார். இது போன்ற திட்டங்கள் மூலம் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களில் செய்யப்பட்ட கணிசமான முதலீடுகள், மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
திரு ஜார்ஜ் குரியன், மீன்வளத் துறையை முன்னெடுத்துச் செல்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். நீலப் புரட்சி மற்றும் கடல் பொருளாதாரத்தின் பரந்த திறனைக் குறிக்கும் "நீல சக்கரம்" குறித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வையை அமைச்சர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124938
*****
RB/DL
(Release ID: 2125026)